- Home
- Tamil Nadu News
- எம்ஜிஆர்.ஐயே பாத்தவங்க நாங்க.. விஜய்யெல்லாம் ஒரு மேட்டரா..? அசால்ட் காட்டும் கே.என்.நேரு
எம்ஜிஆர்.ஐயே பாத்தவங்க நாங்க.. விஜய்யெல்லாம் ஒரு மேட்டரா..? அசால்ட் காட்டும் கே.என்.நேரு
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்திலேயே திமுக வெற்றி பெற்றது அப்படி இருக்கையில் விஜய்யை பார்த்து நாங்கள் அச்சப்பட தேவை இல்லை என்று உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திமுகவை விமர்சிப்பது மட்டுமே விஜய்யின் வேலை
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் தற்போது வரை எந்த இடத்திலும் தங்களது கொள்கை இது தான் என விளக்கி பேசியது கிடையாது. செல்லும் இடம் எல்லாம் திமுக.வை விமர்சித்து மட்டுமே பேசி வருகிறார். இரு மொழி கொள்கை, கல்வி கொள்கை என அவர் தெரிவித்த அனைத்தும் திமுக.வின் கொள்கைகள் தான். புதிதாக எந்த கொள்கையையும் அவர் வெளிப்படுத்தவில்லை. அவரது கொள்கைகளை மக்கள் ஏற்கிறார்களா இல்லையா என்பதை காலம் தான் பதில் சொல்லும். ஆனால் புதிதாக யார் வந்தாலும் அவர்களை திமுக எதிர்கொள்ளும்.
தொடர்ச்சியாக வெற்றி பெற்ற எம்ஜிஆர்..?
முதல் முறையாக எம்ஜிஆர் 1977ல் வெற்று பெற்று முதல்வரானார். அதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்த மொரார்ஜி தேசாய் திடீரென சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக எங்கள் கூட்டணியில் இருந்து விலகினார். அதனால் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி எம்ஜிஆர் தன்னிச்சையாக 130 இடங்களில் வெற்றி பெற முடிந்தது. திமுக 3000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் மட்டும் 40.
காங்கிரஸ் கூட்டணியில் பிளவு
அதன் பின்னர் 1980ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மாபெறும் வெற்றியைப் பதிவு செய்தது. அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 100 தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்ததால் கூட்டணி பிளவு பட்டது. இது எம்ஜிஆர் வெற்றி பெற வாய்ப்பாக அமைந்தது.
யாரை கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை
அதே போன்று 1984ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இழப்பு அவர்களுக்கு மிகப்பெரிய அனுதாப ஓட்டைப் பெற்றுத் தந்தது. இதுவும் அவர் வெற்றி பெற வாய்ப்பாக அமைந்தது. அதே கூட்டணியோடு எம்ஜிஆர் 1986 உள்ளாட்சி தேர்தலை எதிர் கொண்டார். அப்போது திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. எம்ஜிஆர் இருக்கம் வரையில் திமுகவால் வெற்றி பெறவே முடியவில்லை என்று சிலர் சொல்கின்றனர். அது உண்மை கிடையாது. எம்ஜிஆர் காலத்திலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
ஆகவே புதிதாக யாராவது வந்தால் அவர்களைப் பார்த்த அச்சப்படவோ, பதற்றம் அடையவோ எங்களுக்கு அவசியம் இல்லை. எங்கள் தலைவர் தெளிவான குறிக்கோளோடு இருக்கிறார். ஆகையால் 2026ல் எங்கள் வெற்றி உறுதி என்று தெரிவித்துள்ளார்.