MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குறி வைத்து அடிக்கும் பாஜக.. முதல் பலி நான் தான்.. தொண்டர்கள் மத்தியில் பேசிய கேஎன் நேரு

குறி வைத்து அடிக்கும் பாஜக.. முதல் பலி நான் தான்.. தொண்டர்கள் மத்தியில் பேசிய கேஎன் நேரு

திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதில் முதல் பலி நான் ஆகிவிட்டேன் அமைச்சர் என திருவாரூரில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Nov 04 2025, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருவாரூரில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டம்
Image Credit : Asianet News

திருவாரூரில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டம்

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பிலான பாக நிலை முகவர்கள் மற்றும் பிடிஏ முகவர்களுக்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே என் நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாக்குச்சாவடி பாக நிலை முகவர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வாக்காளர் திருத்த பட்டியல் செய்யும் போது எப்படி நடக்க வேண்டும்
Image Credit : Asianet News

வாக்காளர் திருத்த பட்டியல் செய்யும் போது எப்படி நடக்க வேண்டும்

இந்த கூட்டத்தில் வாக்காளர்கள் தொடர்பான சரியான தரவுகளை எவ்வாறு உறுதி செய்வது..? பிஎல்ஏ 2 மற்றும் பிடிஏ ஆகியோரின் குறிக்கோள்கள் மற்றும் பொறுப்புகள் என்னென்ன...? வாக்காளர் பட்டியல் திருத்தம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 92 வயதான திமுக மூத்த முன்னோடி சுப்பிரமணிய பிள்ளை நேற்று மறைந்ததை ஒட்டி அவருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

34
வாக்காளர் பட்டியலை சரியாக செய்தால் பாதி வெற்றி உறுதி..
Image Credit : Asianet News

வாக்காளர் பட்டியலை சரியாக செய்தால் பாதி வெற்றி உறுதி..

தொடர்ந்து பாக நிலை முகவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் கே என் நேரு, வாக்காளர் பட்டியலை சரியாக செய்தோம் என்றால் நமக்கு பாதி வெற்றி உறுதி செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் இருப்பவர்கள் வெளியே சென்றுவிடுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆனால் நமது கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே செல்லவில்லை. ஆனால் அவருடன் இருப்பவர்களில் பாமக இரண்டாக பிரிந்து விட்டது. தேமுதிக வெளியேறிவிட்டது. சின்னம்மா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் என பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் தான் செதில் செதிலாக பிரிந்திருக்கிறார்கள். நாம் அப்படியேதான் ஒற்றுமையாக இருக்கிறோம். தளபதியை மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக உருவாக்கி ஆட்சி கட்டிலில் அமர வைப்பது தான் நமது கடமை.

44
முதல் பலி நான் தான்..
Image Credit : our own

முதல் பலி நான் தான்..

இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக முக ஸ்டாலினை பதவி ஏற்க வைப்பது அவருக்காக அல்ல, கழகத்திற்காக அல்ல, நம்முடைய நன்மைக்காக, பொது மக்களின் நன்மைக்காக. நமது ஆட்சியில் பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த உதவிகள், நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு தான். திமுகவில் இருக்கும் ஒவ்வொருவரையும் குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதில் முதல் பலி நானாகி விட்டேன். எது வந்தாலும் நிற்போம் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே. தவிர விட்டு விட்டு போகக் கூடாது என்றார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
அரசியல்
தேர்தல்
மு. க. ஸ்டாலின்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Related Stories
Recommended image1
நான் எந்த தவறும் செய்யவில்லை.. திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக ED பொய் சொல்கிறது..! திமிறியடிக்கும் கே.என்.நேரு..!
Recommended image2
கொதிக்கும் முதல்வர்.. தமிழகத்தில் இன்று தொடங்குகிறது SIR.. பரபரக்கும் அரசியல் களம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved