- Home
- Tamil Nadu News
- உண்மையை இப்படி மறைக்கலாமா கனிமொழி? தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான்! தரமான பதிலடி கொடுத்த பாஜக!
உண்மையை இப்படி மறைக்கலாமா கனிமொழி? தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான்! தரமான பதிலடி கொடுத்த பாஜக!
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது குறித்து கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

Kanimozhi
தமிழே இல்லாமல் இருந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் வந்ததே பிரதமர் மோடி ஆட்சியில்தான் திமுக எம்.பி. கனிமொழிக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
vanathi srinivasan
இதுதொடர்பாக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் கற்பிக்க நிரந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என, நாடாளுமன்றத்தில், மத்திய அரசு அளித்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், மத்திய அரசில் 15 ஆண்டுகள் திமுக அங்கம் வகித்தபோதும் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருந்தன.
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் சொல்லிட்டு 1000 புதிய பார்களுக்கு உரிமம் வழங்குவதா? வானதி சீனிவாசன்!
Kendriya Vidyalaya school
அப்போது, தமிழ் கற்பிக்க நிரந்தர ஆசிரியர்கள் ஏன் நியமிக்கப்படவில்லை? அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி இதை கேட்டிருக்கலாமே? மத்திய அமைச்சர் பதவிக்காக, பசையான துறைகளுக்காக சோனியா காந்தியிடம் சண்டை போட்ட திமுக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்களை நியமிக்க சண்டை போட்டிருக்கலாமே? தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இல்லை எனக்கூறும் கனிமொழி, இந்தப் பள்ளிகளில் எப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்? தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் எப்போது நியமிக்கப்பட்டனர்? என்பதையும் சொல்ல வேண்டும். ஆனால், உண்மை என்ன தெரியுமா?
pm modi
2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி அரசு அமையும் முன்பு வரை, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் கூட இல்லை. மோடி அவர்கள் பிரதமரான பிறகுதான், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளை விருப்பப் பாடமாக கற்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டது.
இதையும் படிங்க: திட்டமிட்டு திமுக பொய் பிரசாரம்! மோடி அரசு நிதி வழங்காததற்கு இதுதான் காரணம்! வானதி சீனிவாசன்!
vanathi srinivasan Vs Kanimozhi
தமிழே இல்லாமல் இருந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் வந்ததே பிரதமர் மோடி ஆட்சியில்தான். இந்த உண்மையை மறைத்து, நிரந்தர ஆசிரியர்கள் இல்லை என்று, மோடி அரசு மீது பழிசுமத்த முயற்சிக்கிறார் கனிமொழி. புதிய தேசிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அந்தந்த மாநில மொழிப் பாடங்கள் கட்டாயமாக்கப்படும். அப்போது நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான் என்று தெரிவித்துள்ளார்.