- Home
- Tamil Nadu News
- அம்மா தாயே ஒரு சீட்டு குடுங்கன்னு கேட்கிற காலம் போய்! இன்னிக்கு இபிஎஸ் கூவி கூவி ஆள் புடிக்கற நிலை இருக்கு! சொல்வது யார் தெரியுமா?
அம்மா தாயே ஒரு சீட்டு குடுங்கன்னு கேட்கிற காலம் போய்! இன்னிக்கு இபிஎஸ் கூவி கூவி ஆள் புடிக்கற நிலை இருக்கு! சொல்வது யார் தெரியுமா?
எடப்பாடி பழனிசாமி பல்வேறு கட்சிகளை அதிமுக கூட்டணிக்கு அழைப்பது குறித்து கே.பி. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் சீமான் வரை அழைப்பு விடுப்பதை அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல் என இபிஎஸ் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது. இதனால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது விட்டதை பிடிப்பது மட்டுமல்லாமல் அதிமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஆளும் திமுகவை அரசை வீழ்த்துவதற்காக இனி எந்த தேர்தலிலும் பாஜக கூட்டணி கிடையாது என்ற எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். இதில், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.
எடப்பாடி பழனிசாமி அழைப்பு
இந்நிலையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த 7ம் தேதி முதல் தொகுதிவாரியாக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது விழுப்புரத்தில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்கும், திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கும் அனுமதி கொடுக்க மறுக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் நடுவதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டு கூட்டணியில் தொடர வேண்டுமா? கூட்டணியில் இருக்க வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். அதிமுக கூட்டணியில் சேருபவர்களுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம் என திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல் சீமான் மற்றும் தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு அனைத்து கட்சி தலைவர்களும் நிராகரித்தது மட்டமல்லாமல் விமர்சனம் செய்தனர்.
கே.சி.பழனிசாமி
இந்நிலையில் எவ்வளவு பெரிய கட்சி, யார் எல்லாம் இருந்த கட்சி, அதுக்குன்னு ஒரு கெத்து இருக்கு, அதை எல்லாம் விட்டுட்டு இப்படி போய் ஆள் புடிக்கணுமா? என கே.சி.பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: எதுக்கு இப்போ இந்த எடப்பாடி டெய்லி ஒரு கட்சியை எங்க கூட்டணிக்கு வாங்க, எங்க கூட்டணிக்கு வாங்கன்னு கூப்பிட்டு இருக்கார்னு தெரியல, அதுவும் இந்த கம்யூனிஸ்ட எல்லாமா கூப்பிடணும், அதுவும் ரத்தின கம்பளமாம் இன்னிக்கு சீமான கூப்பிட்டு பாத்திட்டு இருக்கார்.
அதிமுக தொண்டர்கள்
அவன் அவன் விழுந்து அடிச்சு வந்து அம்மா, தாயே, ஒரே ஒரு சீட்டு இருந்தா குடுங்கம்மான்னு நின்னுட்டு இருந்த கட்சி, இன்னிக்கு கூவி கூவி ஆள் புடிக்கற மாதிரி இருக்கு. எவ்வளவு பெரிய கட்சி, யார் எல்லாம் இருந்த கட்சி, அதுக்குன்னு ஒரு கெத்து இருக்கு, அதை எல்லாம் விட்டுட்டு இப்படி போய் ஆள் புடிக்கணுமா ? அதிமுக தொண்டர்கள், இரட்டை இலை, MGR, ஜெயலலிதா இவங்களுக்கு மேலயா இந்த கம்யூனிஸ்ட்க ஓட்டு வாங்கி குடுக்க போறாங்க என தெரிவித்துள்ளார்.