- Home
- Tamil Nadu News
- செந்தில் பாலாஜி கால் தூசிக்கு ஆவீங்களாடா நீங்க..! ஆவேசமாக கத்திய கரு.பழனியப்பன்..!
செந்தில் பாலாஜி கால் தூசிக்கு ஆவீங்களாடா நீங்க..! ஆவேசமாக கத்திய கரு.பழனியப்பன்..!
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தை தொடர்ந்து, இயக்குனர் கரு. பழனியப்பன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரு பழனியப்பன் விஜய் விமர்சனம்
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெரும் துயரம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே பலர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொண்டு செல்லப்பட்டாலும், சிலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 41 பேரில் 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் அடங்குவர்.
விஜய் கரூர் விபத்து
மருத்துவமனைகளில் மொத்தம் 110 பேர் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பங்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்தின் முழு காரணத்தை கண்டறிய ஐந்து சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் சாட்சிகள், ஒழுங்கு ஏற்பாடுகள், நிகழ்ச்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பை புறக்கணித்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கரு பழனியப்பன் பேச்சு
குறிப்பாக, இயக்குனர் கரு. பழனியப்பன், “விஜய் தலைவனா? லைட் போட்டு விளையாடிட்டு இருக்கிறான்” என்று கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் அவர்களின் நடிப்பிலே சிறந்த நடிப்பு இந்த 4 நிமிட வீடியோ தான். இதுவரை எந்த மாவட்டத்திலும் நடக்காதது கரூரில் நடந்துள்ளது என்று கூறுகிறார். கரூர் மாவட்டத்துக்கு முன்பு விஜய் சென்றிருந்த நாமக்கல் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. விக்கிரவாண்டி மாநாட்டில் 440 பேர் மயக்கம் அடைந்தனர் என்று உங்கள் இயக்கத்தில் ஏற்கனவே இருந்தவர் கூறியுள்ளார்.
கரு பழனியப்பன் கடும் விமர்சனம்
முதல் மாநாட்டில் இருந்தே தண்ணீர் இல்லை, ஏற்பாடு சரியில்லை என்று கூறியிருப்பார்கள். என்ன பெரிய தியாகி மாதிரி பேசுகிறார். அவர் தொனியே மாறிப்போச்சு. நீங்க வாங்க, உங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கு. 40 பேர் கொன்னுட்டீங்களே. நீங்க வருவீங்க, பேசிட்டு போவீங்க. யாருமே பொறுப்பு ஏற்கமாட்டீங்க. கலைஞர் கருணாநிதி ஒவ்வொரு மாநாட்டிலும் பார்த்து பத்திரமா போகணும் என்று கூறுவார். இவரை பார்த்து வளர்ந்து விஜயகாந்த் அதேபோல ரசிகர்களுக்கு அறிவுரை கூறுவார். எம்ஜிஆர் கூட்டத்திலும் இதேபோல தான். விஜய்கிட்ட என்ன இருக்கு? 40 குடும்பத்தை நாசமாக்கிட்டு 3 நாள் கழிச்சு பேசிருக்காரு. முதல்வர் ஸ்டாலின் சரியான நடவடிக்கை எடுத்துருக்கணும்.
விஜயை அட்டாக் செய்த் கரு பழனியப்பன்
முதல்வர், துணை முதல்வர் மிகவும் சாப்டாக டீல் செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி கரூரில் கூட்டத்தை நடத்தினார். மாவட்ட செயலாளர் இல்லாமல் கூட்டம் திமுக, அதிமுகவில் நடக்காது. மக்களை 7 மணி நேரம் காத்திருக்க வைத்து கொலை செய்தவர்கள் நீங்கள், எந்த தலைவனாவது லைட் ஆப் பண்ணி ஆப் பண்ணி விளையாடுவானா? அறிவு இருக்குற ஒருத்தன் இப்படி செய்வானா? செந்தில் பாலாஜி கால் தூசிக்கு ஆவீங்களாடா? தலைவனும் முட்டாளா இருக்கான், தொண்டனும் முட்டாளா இருக்கான்” என்று கரு.பழனியப்பன் ஆவேசமாக பேசியுள்ளார்.