- Home
- Tamil Nadu News
- இந்த முறை கன்பார்ம்! நாதகவில் இருந்து விலகிறார் காளியம்மாள்? அடுத்து குறி வைத்துள்ள கட்சி எது தெரியுமா?
இந்த முறை கன்பார்ம்! நாதகவில் இருந்து விலகிறார் காளியம்மாள்? அடுத்து குறி வைத்துள்ள கட்சி எது தெரியுமா?
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள், சீமானுடனான சர்ச்சைக்குப் பிறகு கட்சியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முறை கன்பார்ம்! நாதகவில் இருந்து விலகிறார் காளியம்மாள்? அடுத்து குறி வைத்துள்ள கட்சி எது தெரியுமா?
தமிழகத்தில் திமுக - அதிமுக ஆகிய பலம் வாய்ந்த கட்சிக்கு எதிராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வந்தது. அந்த வகையில் சீமானின் ஆவேச பேச்சுக்கு ஏராளமான இளைஞர்கள் அவரது பின்னால் சென்றனர். அந்த வகையில் தேர்தல் களத்தில் தனித்து களம் கண்டு 10 சதவிகித வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சாலே நாம் தமிழர் கட்சியில் இருந்து மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சி
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் அணிப் பாசறை ஒருங்கிணைப்பாளர்களும், ஸ்டார் பேச்சாளருமான இருப்பவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள். இவர் நாம் தமிழர் சார்பில் வடசென்னை மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளராகவும், பூம்புகார் பகுதியில் எம்.எல்.ஏ. வேட்பாளராகவும் போட்டியிட்டவர். மேலும், கடந்த 2018ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்த காளியம்மாள் 7வது ஆண்டுகளாக பயணித்து வருகிறார்.
காளியம்மாள்
இந்நிலையில் காளியம்மாளை பிசிறு என்று விமர்சித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விரைவில் வேறு கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சீமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காளியம்மாள் பங்கேற்று அனைத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதையும் காளியம்மாள் திட்டவட்டமாக மறுத்தார்.
தமிழக வெற்றிக் கழகம்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேற காளியம்மாள் முடிவெடுத்துவிட்டதாகவும் அடுத்து எந்த கட்சிக்கு செல்வது? குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம், அதிமுக ஆகிய கட்சிகளுடன் காளியம்மாள் தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது ஆளும் திமுக தரப்புடனும் காளியம்மாள் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.