- Home
- Tamil Nadu News
- மாதம் 80ஆயிரம் ரூபாய் வரை சம்பளம்.! குவிந்து கிடக்கும் வேலை- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
மாதம் 80ஆயிரம் ரூபாய் வரை சம்பளம்.! குவிந்து கிடக்கும் வேலை- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசு பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மலேசியாவில் பணிபுரிய பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
ஆண்டு தோறும் கல்வியை முடித்து பல லட்சம் பேர் வேலை தேடி வருகிறார்கள். எனவே அனைவருக்கும் வேலையை உறுதி செய்திடும் வகையில் தமிழக அரசு பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு நிறுவனங்களை தமிழக முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறது. இதன் காரணமாக படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் துறை மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்புக்கான முகாம்களையும் நடத்தி வருகிறது.
கை நிறைய சம்பளத்தில் மலேசியாவில் வேலை
மேலும் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க விரும்புபவர்களுக்காக ஜெர்மனி, சவுதி, துபாய், உள்ளிட்ட இடங்களில் உள்ள காலி பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மலேசியாவில் கை நிறைய சம்பளத்தில் பணி புரிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொறியியல் - 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை
மலேசியாவில் பணிபுரிய B.E & B.TECH தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவத்துடன் 24 இருந்து 42 வயதிற்கு உட்பட்ட QC Inspector (Cswip 3.1) . 70,000-80,000/-. Piping Engineer ரூ. 60.000 - 80,000/-, Planning Engineer (Primevara P6) பணிக்கு ரூ 70,000-84.000/-, Tendering Engineer பணிக்கு ரூ. 70,000 - 76,000/-, Piping Foreman பணிக்கு 54,000-62,400/ ஆகும்.மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் TIG & ARC Welders CS பணிக்கு மாத வருமானம் ரூ.41.600-50,000/- & Pipe Fitter பணிக்கு ரூ. 38,000-50,000/- ஊதியமாக வழங்கப்படும்.
உணவு, விசா, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு
உணவு, விசா இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்.?
கல்வி. பணி அனுபவ சான்றிதழ் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றை 29.05.2025க்குள் அனுப்பவும்.கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in வேலைவாய்ப்பு நிறுவன எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.