- Home
- Tamil Nadu News
- டேய் மடையா பேசுறத கேளுடா! மேடையில் டென்ஷனாகி தொண்டரை ஒருமையில் திட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!
டேய் மடையா பேசுறத கேளுடா! மேடையில் டென்ஷனாகி தொண்டரை ஒருமையில் திட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!
அதிமுக பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், குடிபோதையில் இருந்த தொண்டர் ஒருவர் இடையூறு செய்தார்.

அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி உளறல்களாகப் பேசுவதில் தனி இடம் உண்டு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். சட்னி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய் என்று பேசி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதேபோல ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டிடிவி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ-க்களும் பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், இயேசுநாதரை சுட்டுக் கொன்ற கோட்சே என்று பேசி அதிரவைத்தார்.
dindigul srinivasan
அதேபோல் தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் எம்ஜிஆர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடை பெற்றது. அப்போது 2021ம் சட்டமன்ற தேர்த்லில் எடப்பாடி பழனிசாமி 525 வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுகிறார் என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
dindigul srinivasan angry
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புலியூர் நத்தத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த ஒரு தொண்டர் 100 நாள் வேலைக்கு சம்பளம் தரமாட்டிங்கிறாங்க, ஒயின்ஷாப்பில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குகிறார்கள் அதையும் பேசுங்கள் என சத்தம் போட்டு இடையூறு செய்துள்ளார்.
AIAD MK dindigul srinivasan