MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Chennai Metro: நியூயார்க்கை விட சென்னை மெட்ரோ தான் பெஸ்ட்! புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு பயணி!

Chennai Metro: நியூயார்க்கை விட சென்னை மெட்ரோ தான் பெஸ்ட்! புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு பயணி!

Chennai Metro: சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த வெளிநாட்டு பயணி ஒருவர் நியூயார்க் சப்வேயை விட சென்னை மெட்ரோ சிறப்பாக உள்ளதாக புகழ்ந்து தள்ளியுள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 26 2026, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சென்னை மெட்ரோ ரயில்கள்
Image Credit : x

சென்னை மெட்ரோ ரயில்கள்

சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம என பல்வேறு வழித்தடங்கலில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி சென்னையின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் வகையில் ப‌ணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

விமான நிலையங்களை பொறாமைப்பட வைக்கும் சென்னை மெட்ரோ

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைந்துள்ளன. இதுமட்டுமின்றி மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மெட்ரோ ரயில்கள் பெரிதும் கைகொடுத்து உதவுகின்றன. இதன் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தினமும் ஏராளமானோர் பயணித்தாலும் சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மிகவும் சுத்தமாக பரமாரிக்கப்படுகின்றன. விமான நிலையங்களே பொறாமைப்படும் அளவுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் சுத்தமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சென்னை மெட்ரோவை புகழ்ந்த வெளிநாட்டு பயணி
Image Credit : Google

சென்னை மெட்ரோவை புகழ்ந்த வெளிநாட்டு பயணி

இந்த நிலையில், சென்னைக்கு வந்த ஜப்பானிய பெண் பயணி ஒருவர், சென்னை மெட்ரோவை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதாவது சென்னை மெட்ரோவில் பயணம் செய்த அவர், ''பேருந்து நிலையத்தை (கிளாம்பாக்கம்) நேரில் சென்று பார்ப்பதற்காக இந்தியாவிலுள்ள சென்னையில் மெட்ரோவில் பயணிக்கிறேன். இந்த பிளாட்பாரத்தில் 'பிளாட்பாரம் ஸ்கிரீன் டோர்ஸ்' (தானியங்கி பாதுகாப்பு கதவுகள்) மற்றும் சிறப்பாக வேலை செய்யும் ஏசி வசதியும் உள்ளன. இதனுடைய உள்கட்டமைப்பு வசதிகள் நியூயார்க்கின் சப்வேயை விட ஒட்டுமொத்தமாகவே பல மடங்கு சிறப்பாக இருக்கின்றன'' என்று எக்ஸ் தளத்தில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Related image1
சென்னை மெட்ரோ பயணிகளே உஷார்.. ரயிலில் இனி சத்தமாக பேசினால் அபராதம்.. புதிய விதி வந்தாச்சு!
Related image2
10 நிமிடத்திற்கு ஒருமுறை.. சென்னையே மாறப்போகுது.. மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்
34
நியூயார்க் சப்வேயை விட தூய்மை
Image Credit : our own

நியூயார்க் சப்வேயை விட தூய்மை

இதில் குறிப்பிடத்தக்க விஷயமே அவர் உலகப்புகழ்பெற்ற நியூயார்க் சப்வேயை விட சென்னை மெட்ரோ பல மடங்கு சிறப்பானதாகவும், தூய்மையாகவும் இருக்கிறது என்று கூறியதுதான். நியூயார்க் போன்ற பழமையான சப்வேக்களில் குப்பைகள் மற்றும் அசுத்தம் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில், சென்னையின் மெட்ரோ நிலையங்களும் ரயில்களும் எவ்விதக் கறைகளும் இன்றி மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதை அவர் பாராட்டியுள்ளார். துல்லியமாகச் செயல்படும் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி (AC), மற்றும் பயணிகளுக்கு வழிகாட்டும் டிஜிட்டல் திரைகள் போன்ற நவீன உள்கட்டமைப்பு அவருக்குப் பெரும் திருப்தியை அளித்துள்ளது.

44
சென்னைவாசிகள் பெருமிதம்
Image Credit : Google

சென்னைவாசிகள் பெருமிதம்

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் அமெரிக்காவை விட சென்னை மெட்ரோ சூப்பராக உள்ளது என்று பாராட்டியது சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. சிங்காரச் சென்னை" என்று அழைக்கப்படும் நமது சென்னை மெட்ரோ உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதாக சென்னைவாசிகள் மட்டுமின்றி தமிழககம் முழுவதும் பலரும் சமூகவலைத்தளங்களில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய கட்டமைப்பை தினமும் சுத்தமாக பராமரிக்கும் சென்னை மெட்ரோவின் துப்புரவு பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு சல்யூட்

பொதுவாக நாம் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அங்குள்ள உள்கட்டமைப்பைப் பார்த்து வியப்பதே வழக்கம். ஆனால், இன்று ஒரு வெளிநாட்டுப் பயணி சென்னையின் உள்கட்டமைப்பைப் பார்த்து வியந்து பாராட்டுவதுதற்கு சென்னை மெட்ரோ நிர்வாகமே முக்கிய காரணம். இதற்காக சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை
ரயில்
சென்னை மெட்ரோ

Latest Videos
Recommended Stories
Recommended image1
EPS vs Stalin: எடப்பாடிக்கு செக் மேட்.! எஸ்.பி.வேலுமணிக்கு ஆஃபர்களை அள்ளி வீசி ரகசிய டீல் போட்ட ஸ்டாலின்.! மொத்தமாக சரியும் கொங்கு கோட்டை?!
Recommended image2
₹5 lakhs for Women:பெண்கள் பெயரில் நிலம் வாங்க அரசே 5 லட்சம் ரூபாய் தருது! யார் யார் வாங்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?
Recommended image3
10th Public Exam Answer Sheet Copy: மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! இன்று முதல் ஜூன் 23 வரைக்கும் டைம்! முக்கிய அறிவிப்பு வெளியானது!
Related Stories
Recommended image1
சென்னை மெட்ரோ பயணிகளே உஷார்.. ரயிலில் இனி சத்தமாக பேசினால் அபராதம்.. புதிய விதி வந்தாச்சு!
Recommended image2
10 நிமிடத்திற்கு ஒருமுறை.. சென்னையே மாறப்போகுது.. மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved