- Home
- Tamil Nadu News
- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி? அவருக்கு பதிலாக மசோதா தாக்கல் செய்த ரகுபதி!
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி? அவருக்கு பதிலாக மசோதா தாக்கல் செய்த ரகுபதி!
போக்குவரத்து துறை வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜாமீனா? அமைச்சர் பதவியா? என்பதை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Minister senthil balaji
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும் தற்போது திமுக அமைச்சராக உள்ளவர் செந்தில் பாலாஜி. இவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 471 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதும் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
Supreme Court
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த அபயா எஸ் ஓகா மற்றும் ஏஜி மாசி தலைமையிலான அமர்வு விசாரணையின் போது திங்கள் கிழமைக்குள் ஜாமீனா? அமைச்சர் பதவியா? என்பதை செந்தில்பாலாஜி தெரிவிக்க அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர். இதனால் முதல்வர் ஸ்டாலின் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதை அடுத்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்த 3 பிரபல ரவுடிகள் தலைநகர் சென்னைக்குள் நுழைய தடை! யாரெல்லாம் தெரியுமா?
Tamilnadu Assembly
இந்நிலையில் சட்டப்பேரவையில் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்க வழிவகுக்கும் மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்வார் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அதை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: டைம் கொடுத்த உச்சநீதிமன்றம்! வேறு வழியே இல்லை! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் செந்தில் பாலாஜி?
Minister Regupathy
அதாவது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டால் இன்று தாக்கல் செய்யப்படும் மசோதா சட்டப்பேரவையின் இறுதி நாளான ஏப்ரல் 29ம் தேதி விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமாகும். அன்றைய தினம் செந்தில் பாலாஜியால் பதிலளிக்க முடியாது என்பதால்தான், மாற்று ஏற்பாடாக இன்று அமைச்சர் ரகுபதி, மசோதாவை தாக்கல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.