MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்தினால் இவ்வளவு ஆபத்துகளா?; எச்சரிக்கும் மருத்துவர்கள்!

நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்தினால் இவ்வளவு ஆபத்துகளா?; எச்சரிக்கும் மருத்துவர்கள்!

நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்தினால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2 Min read
Rayar r
Published : Dec 17 2024, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tongue Tattoo

Tongue Tattoo

இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நூட்பம் வளர வளர மக்களின் வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. உணவு, உடை கலாசாரம் மாறி வருகிறது. இன்றைய இளைஞர்கள் நவநாகரீகம் என்ற பெயரில் ஏதேதோ செய்கிறார்கள். அதில் ஒன்று தான் டாட்டூ குத்துவது. விளையாட்டு பிரபலங்கள், சினிமா பிரபலங்களை பார்த்து இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களுடைய உடலில் டாட்டூ குத்துவது அதிகரித்து வருகிறது.

ஆனால் சிலர் உடலின் முகத்தை மற்ற அனைத்து பாகங்களிலும் டாட்டூ குத்திக் கொள்கின்றனர். இப்போது ஒருபடி மேலே போய் ‘பாடி மாடிஃபிகேஷன்’ என்ற பெயரில் கண்களுக்குள் டாட்டூ போட்டுக் கொள்வது, நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்துவது என ஆபத்தான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இந்த ஆபத்தான கலாசாரம் புகுந்து திருச்சியிலும் இருவர் நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்திக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

24
Tongue Tattoo Dangerous

Tongue Tattoo Dangerous

அதாவது நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்திய திருவெறும்பூர் கூத்தைப்பாரைச் சேர்ந்த வி.ஜெயராமன், டாட்டூ சென்டர் நடத்தி அவருக்கு டாட்டூ குத்திய ஹரிஹரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதேபோல் டாட்டூ குத்திக்கொண்ட 17 வயது சிறுவனை காவலர்கள் எச்சரித்து அனுப்பினார்கள். 

இந்த செய்தியே இப்போது ஹாட் டாபிக் ஆக உள்ளது. இப்படி நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்துவது பெரும் ஆபத்தானது மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் அதிகமாக ரத்த ஓட்டம் செல்லும் பகுதி நாக்கு என்பதால், நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்தும்போது அதிக இரத்த இழப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

டிச.14ல் நடந்த அரசு உதவி வழக்கறிஞர் தேர்வை திடீரென ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி; என்ன காரணம்?
 

34
Type of Tattoos

Type of Tattoos

மேலும் நாக்கை இரண்டாக பிளக்கும்போது வாய் பேச முடியாமல் போகலாம் என்று கூறும் மருத்துவர்கள் உணவு சாப்பிட முடியாத நிலை கூட ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர். ‘பாடி மாடிஃபிகேஷன்’ என்ற பெயரில் உடல் அழகுக்காக முறையான அறுவை சிகிச்சையை மருத்துவ கொள்கைப்படி செய்ய முடியாது என்றும் மருத்துவர்கள் விவரிக்கின்றனர்.
 

44
Eye Tattoo

Eye Tattoo

ஒரு பொதுவெளியில் நமது இஷ்டப்படி அறுவை சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது; அறுவை சிகிச்சைக்கு  அதற்கு தேவையான அரங்கம், அதற்கான சுற்றுச்சூழல் இருப்பது அவசியம் என்று கூறியுள்ளனர். மேலும் தகுதியான மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும்; யார் வேண்டுமானாலும் அறுவை செய்து கொள்வது என்பது மிகவும் ஆபத்தில் போய் முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

'சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டிய தொண்டருக்குதான் தவெகவில் பதவி'; புஸ்ஸி ஆனந்த் சொல்கிறார்!
 

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved