- Home
- Tamil Nadu News
- விஜய்க்கு எதிராக உத்தரவு பிறப்பித்தால் நீதிபதியை விமர்சிப்பதா? கொந்தளித்த நீதிபதி செந்தில்குமார்..!
விஜய்க்கு எதிராக உத்தரவு பிறப்பித்தால் நீதிபதியை விமர்சிப்பதா? கொந்தளித்த நீதிபதி செந்தில்குமார்..!
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன் மீது அவதூறு கருத்துக்களைப் பரப்புவதாக மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து, கிரிசில்டா பதிலளிக்க உத்தரவிட்டார்.

மாதம்பட்டி ரங்கராஜ்
திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிறிஸ்டில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிடில்டாவின் பேட்டி காரணமாக தனது இரண்டு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம்
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. மனுவுக்கு அக்டோபர் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
நீதிபதி செந்தில்குமார்
இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதி செந்தில்குமார்: சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைப்பதில்லை. உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளையும் விமர்சிக்கின்றனர். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களை குறிப்பிட்டும் முந்தைய கால நிகழ்வுகளை குறிப்பிட்டும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய்
கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் தொடர்பான வழக்குகளை கடந்த வாரம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.