பொதுமக்களுக்கு சூப்பர் நியூஸ்! அறிமுகமாகிறது புதிய வகையான ஆவின் பால்! எப்போதில் இருந்து தெரியுமா?
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் புதிய வகை பாலான பாலை அறிமுகம் செய்ய உள்ளது. வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட இந்தப் பால் காஞ்சிபுரம்-திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய ஒன்றியங்களில் டிசம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும்.
Aavin Milk
ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சார்பில், தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் கண்காணிப்பில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. ஆவின் பாலை தமிழக்தில் பல கோடி மக்கள் நம்பியுள்ளனர். குறைந்த விலையில் சத்தான மற்றும் தரமான பாலை தமிழக அரசின் ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் புதிய வகையான ஆவின் பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.
Aavin Milk
இதுதொடர்பாக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 31 இலட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான பால் உபப்பொருட்கள் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய செய்தி! மிஸ் பண்ணிடாதீங்க!
Aavin Company
தமிழ்நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களிள் தேவையை அறிந்து ஆவின் பால்
மற்றும் பால் உபப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் மற்றும் பால் உபப்பொருட்களின் தேவை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், விற்பனை நிலையங்களை அதிகரிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலாப் பகுதிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு! மீண்டும் தேர்வு எப்போது? மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்!
Aavin Green Magic Milk
பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய பால் மற்றும் பால் உபப்பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் காஞ்சிபுரம்-திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஒன்றியங்களில் டிசம்பர் 18ம் தேதி முதல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.