இடைநிலை ஆசிரியர்களுக்கு அழைப்பு.! எத்தனை இடங்கள்.? சம்பளம் எவ்வளவு தெரியுமா.? விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?
ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Teachers Recruitment Board
ஆதிதிராவிட பள்ளிகள்
சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
Teachers
தகுதிகள்
கல்வித்தகுதி/ வயது
இடைநிலை ஆசிரியருக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும்.
முன்னுரிமை
முன்னுரிமை ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் முன்னுரிமை பரிசீலிக்கப்படும்.
இடைநிலை ஆசிரியர்கள்
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் ( TET PAPER-I ) தேர்ச்சி பெற்றவர்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள்.
பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்)
பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்)
மாவட்ட எல்லைக்குள் (இல்லையெனில்) வசிப்பவர்கள்
அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள்.
school teacher
காலிப்பணியிட விவரங்கள்
இடைநிலை ஆசிரியர்கள் -3 பணியிடங்கள் ( சம்பளம் ரூ.12,000/-)
1 அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி,வளசரவாக்கம்-2
2 அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி,வடபெரும்பாக்கம்-1
தமிழகத்தில் 9 மாவட்டங்ககளுக்கு குட் நியூஸ்! அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு!
விண்ணப்பிக்க கடைசி நாள்
தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2-ம் தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்
விண்ணப்பங்களை நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ 19.07.2024 மாலை 5.45 மணிக்குள் அளிக்கவும் என சென்னை மாவட்ட ஆட்சித்
தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடேதெரிவித்துள்ளார்.