அரசியலில் களம் இறங்கும் இன்பநிதி.? அடுத்த வாரிசை அறிமுகம் செய்ய திட்டமிடும் திமுக தலைமை
திமுகவில் அரசியல் வாரிசாக உதயநிதியின் மகன் இன்பநிதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அரசு விழாக்களில் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதியுடன் இன்பநிதியும் மேடையில் தோன்றுவது இதற்கு வலு சேர்க்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்பநிதிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
karunanidhi
திமுகவும் அரசியல் வாரிசு
தமிழத்தின் ஆளும் கட்சியாக உள்ள திமுக அடுத்த அரசியல் வாரிசை படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது. அதன் முன்னோட்டம் தான் அரசு விழாக்களில் முதலமைச்சர் ஸ்டாலினோடும், உதயநிதியோடும் களத்தில் வர தொடங்கியுள்ளார் இன்பநிதி, 1949ஆம் ஆண்டு திமுக என்ற அரசியல் கட்சியானது அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது. இதனையடுத்து 1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடித்தத அண்ணா சில நட்களில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மறைவையடுத்து 1969ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.கருணாநிதி.
karunanidhi
கருணாநிதியும் அரசியலும்
5 முறை தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகித்த கருணாநிதி, தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி அசத்தினார். அப்போது அரசியல் ஆர்வம் காரணமாக களத்தில் இறங்கினார் மு.க.ஸ்டாலின், 1976-ஆம் ஆண்டு அவசர நிலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பல வருடங்கள் கட்சி பொறுப்புகளில் மட்டுமே இருந்த மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து மீண்டும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.
அரசியல் களத்தில் ஸ்டாலின்
அமைச்சர், துணை முதலமைச்சர் என பல பொறுப்புகளிலும் மு.க.ஸ்டாலின் வகித்தார். இதனையடுத்து 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சியை இழந்த திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற 10 வருடங்கள் தேவைப்பட்டது. இதற்கிடையே 2018ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவையடுத்து தலைவர் பொறுப்பை ஏற்றார் மு.க.ஸ்டாலின். இதனையடுத்து அரசியலில் களம் இறங்கினார் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, இதற்கு முன்பு வரை அரசியலுக்கு உதயநிதி வர வாய்ப்பில்லையென உறுதிபட தெரிவித்திருந்தார்
உதயநிதியும் திமுகவும்
மு.க.ஸ்டாலின். ஆனால் 2019ஆம் ஆண்டு கட்சி நிகழ்வுகளில் தலைக்காட்ட தொடங்கி உதயநிதி சில நாட்களிலையே தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு தலைமையால் அனுப்பிவைக்கப்பட்டனர். அந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதியின் பங்கு முக்கியமாக அமைந்ததாக கூறி அதற்கு பரிசாக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி விரைவில் அமைச்சராவார் என கூறப்பட்டது.
துணை முதலமைச்சராக உதயநிதி
ஆனால் இதனை உதயநிதி மறுத்த நிலையில் திடீரென இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்தாக துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது அதனையும் உதயநிதி மறுத்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி, அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் முழு நேர அரசியலில் இறங்கிய உதயநிதி 6 வருடங்களில் எம்எல்ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என்ற உயர் பொறுப்பை பிடித்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த அரசியல் வாரிசாக உதயநிதியின் மகன் இன்பநிதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு ஏற்றார் போல அரசு விழாக்களில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதியோடு மேடையேறிவருகிறார்.
அடுத்த அரசியல் வாரிசு .?
பொங்கல் விழாவில் தனது தாத்தாவும் முதலமைச்சருடன் கொண்டாடிய போட்டோவை தமிழக அரசே வெளியிட்டுள்ளது. அரசு சார்பாக நடத்தப்படும் விளையாட்டு போட்டி போன்ற நிகழ்வுகளில் அடிக்கடி இன்பநிதியை காண முடிகிறது. அந்த வகையில் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர்கள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு இடையே இன்பநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பவே இன்பநிதியை அரசியல் வாரிசாக கொண்டுவர திமுக திட்டம் வகுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.