- Home
- Tamil Nadu News
- எந்த பக்கம் திரும்பினாலும் இந்தி தான் தெரியனும்! தெற்கு ரயில்வேக்கு இந்திய ரயில்வே உத்தரவு - பயணிகள் ஷாக்
எந்த பக்கம் திரும்பினாலும் இந்தி தான் தெரியனும்! தெற்கு ரயில்வேக்கு இந்திய ரயில்வே உத்தரவு - பயணிகள் ஷாக்
தெற்கு ரயில்வேயில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துமாறு இந்திய ரயில்வே பிறப்பித்துள்ள உத்தரவு பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க உத்தரவு
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக இந்திய ரயில்வே இருந்து வருகிறது. இந்திய ரயில்வேயானது தெற்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, மத்திய ரயில்வே என பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் தெற்கு ரயில்வேயின் கீழ் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கிடையாது?
இதனிடையே தெற்கு ரயில்வேயில் முதல் மொழியாக மாநில மொழியும், இரண்டாவது இடத்தில் இந்தி மொழியும், மூன்றாவது இடத்தில் ஆங்கிலமும் இடம் பெற்றிருக்கும். ஊர்களின் பெயர் பலகைத் தொடங்கி பெருவாரியான இடங்களில் இதே நடைமுறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இணைப்பு மொழியாக மாறும் இந்தி?
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துமாறு இந்திய ரயில்வே புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. டிக்கெட் கவுண்டர்கள், உள் அறிக்கைகள் உள்ளிட்டவற்றில் இந்தி மொழியின் பயன்பாட்டை பிரதானப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இணைப்பு மொழியாக இந்தியை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் தென்மாநில ரயில்வே பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.