- Home
- Tamil Nadu News
- தயாராக இருங்க மக்களே! இனிமே தான் வெயிலின் ஆட்டமே இருக்காம்! தமிழ்நாடு வெதர்மேன் பகீர்!
தயாராக இருங்க மக்களே! இனிமே தான் வெயிலின் ஆட்டமே இருக்காம்! தமிழ்நாடு வெதர்மேன் பகீர்!
தமிழகத்தில் வட மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும், பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளைத் தவிர வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

temperature
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வாயில்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். அந்த அளவுக்கு கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது ஓரிரு மாவட்டங்களில் கோடை மழை பெய்த போதும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் அதிகரித்தே காணப்படுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூர், கரூர், சேலம், ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: வேலூரில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்குமாம்! யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க! மாவட்ட ஆட்சியர் வார்னிங்!
tamilnadu heatwave
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இதனிடையே தமிழ்நாட்டில் இன்று முதல் ஏப்ரல் 14ம் வரை வட மாவட்டங்களில் 40 °C முதல் 42 °C என்ற அளவில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இன்று முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Tamil Nadu Weatherman Pradeep John
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இந்நிலையில் வட தமிழ்நாட்டில் ஏப்ரல் 11,12ம் ஆகிய தேதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ராயலசீமா, உள் கர்நாடக பகுதிகளில் இருந்து வெப்ப அலை தமிழ்நாட்டை நோக்கி வர வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுதாம்!
Chennai Heat
மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாக வாய்ப்பு
வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இர நாட்கள் வெயில் கடுமையாக இருக்கும். மேலும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும். வட தமிழ்நாட்டில் ஏப்ரல் 11,12 ஆகிய தேதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும். சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. குறிப்பாக வேலூரில் அதிகபட்சமாக இருக்கும் தெரிவித்துள்ளார்.