செப்டம்பரில் மட்டும் 11 நாள் விடுமுறையா.!! பள்ளி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் மிலாடி நபி, வார விடுமுறை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறை என பல விடுமுறை நாட்கள் உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை
விடுமுறை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டம் தான். அந்த வகையில் பள்ளி மாணவர்கள் ஓவ்வொரு மாதமும் காலண்டரில் இந்த மாதம் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என பார்ப்பார்கள்.
கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த நிலையில். அந்த மாதம் முழுவதும் வார விடுமுறை தவிர்த்து கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்கவில்லை. ஜூலை மாதத்தில் மொகரம் பண்டிகை விடுமுறை வந்தது. ஆனால் அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால் எந்த வித பயனும் இல்லாத மாதமாக ஜூலை மாதம் அமைந்தது.
ஏமாற்றம் அளித்த ஜூன்- ஜூலை
இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு கொத்து கொத்தாக விடுமுறையை அள்ளிக்கொடுத்த மாதமாக அமைந்தது. அந்த வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா விடுமுறை கிடைத்தது. இதனையடுத்து ஆகஸ்ட் 16ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையாக அமைந்தது.
அடுத்தாக ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விடுமுறை கிடைத்தது. எனவே ஆகஸ்ட் மாதத்தில் சனி, ஞாயிறோடு சேர்த்து கூடுதலாக 3 நாட்கள் விடுமுறையானது கிடைத்ததால் மாணவர்கள் சந்தோஷம் அடைந்தனர்
விடுமுறையை அள்ளிக்கொடுத்த ஆகஸ்ட்
இந்த நிலையில் செப்டம்பர் மாதமும் மாணவர்களுக்கு குஷியான மாதமாகவே அமைந்துள்ளது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபி விடுமுறையாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்கள் ஆகும்.
அடுத்ததாக 13.14 அரசு வார விடுமுறை நாட்களாக உள்ளது. இதை தொடர்ந்து 20 மற்றும் 21 அரசு விடுமுறை நாட்களாக உள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற 26 ஆம் தேதியுடன் காலாண்டு பள்ளித் தேர்வுகளானது முடிவடையுள்ளது.
செப்டம்பரில் காலாண்டு விடுமுறை
இதனையடுத்து செப்டம்பர் 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதால் மாணவர்களுக்கு கொண்டாட்டமான மாதமாக செப்டம்பர் மாதம் அமைந்துள்ளது. அதிலும் காலாண்டு தேர்வு விடுமுறையானது செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் குஷியாக உள்ளனர்.