MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தொகுதி மறுவரையறை மூலம் மக்களவையில் என்ன மாற்றம் வரும்?

தொகுதி மறுவரையறை மூலம் மக்களவையில் என்ன மாற்றம் வரும்?

Carnegie Endowment Delimitation Estimates: 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாடு, கேரளாவுக்கு தலா 8 தொகுதிகள் வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மாநில உரிமைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.

2 Min read
SG Balan
Published : Feb 25 2025, 09:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Carnegie Endowment on Delimitation of Lok Sabha Seats

Carnegie Endowment on Delimitation of Lok Sabha Seats

மாநிலங்களுக்கான தற்போதைய மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. இது 2026ஆம் ஆண்டின் உத்தேச மக்கள்தொகை அடிப்படையில் திருத்தப்பட்டால், சில மாநிலங்கள் அதிக தொகுதிகளைப் பெறக்கூடும், மற்றவை பல தொகுதிகளை இழக்கக்கூடும் என கேமிகி எண்டோமென்ட் மதிப்பீடுகள் காட்டுகின்றன.

27
Lok Sabha Delimitation Estimates

Lok Sabha Delimitation Estimates

கேமிகி எண்டோமென்ட் மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகபட்சமாக தமிழ்நாடு, கேரளா இரு மாநிலங்களுக்கும் தலா 8 தொகுதிகள் இழப்பு ஏற்படும். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திற்கும் (தெலுங்கானா, ஆந்திரா) மொத்தம் 8 தொகுதிகள் இழப்பு வரும்.

37
Delimitation changes

Delimitation changes

மேற்கு வங்கம் (4), ஒடிசா (3), கர்நாடகா (2), இமாச்சலப் பிரதேசம் (1), பஞ்சாப் (1), உத்தராகண்ட் ஆகியவையும் தங்கள் மக்களவைத் தொகுதி எண்ணிக்கையில் இழப்பைச் சந்திக்கும் என கேமிகி எண்டோமென்ட் மதிப்பீடு கூறுகிறது. அசாம் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

47
Delimitation benefits

Delimitation benefits

ஆனால், இந்தி பேசுபவர்கள் அதிகம் வசிக்கும் நான்கு மாநிலங்கள் கூடுதலாக பல மக்களைத் தொகுதிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. உத்தரப் பிரதேசம் 11, பீகார் 10, ராஜஸ்தான் 6, மத்தியப் பிரதேசம் 4 தொகுதிகளைக் கூடுதலாக பெறக்கூடும். இதுமட்டுமின்றி, மேலும் 5 வட மாநிலங்களுங்களும் இதன் மூலம் பயன் அடையும்.

57
Delimitation beneficiaries

Delimitation beneficiaries

சட்டிஸ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய ஐந்து வட மாநிலங்ககளுக்கான மக்களவைப் பிரதிநிதித்துவம் தலா தொகுதி அதிகரிக்கும். இந்த மாநிலங்களும் இந்தி பேசும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

67
Tamil Nadu Chief Minister MK Stalin

Tamil Nadu Chief Minister MK Stalin

குழந்தைக் கட்டுப்பாடுத் திட்டத்தை முறையாக அமல்படுத்தி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய காரணத்தினால் தென்மாநிலங்களில் மக்கள்தொகை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. இந்நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநில்ங்களுக்கான மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் என்று கவலை எழுந்துள்ளது.

 

77
PM Modi and MK Stalin

PM Modi and MK Stalin

மக்களவை பிரதிநிதித்துவம் குறையும்போது மாநிலங்களுக்கான உரிமைகளைப் பெறுவதில் பிரச்சினைகள் ஏற்படும், பல விவகாரங்களில் மத்திய அரசிடம் மாநில உரிமைகளை பறிகொடுக்க நேரிடும் என்று திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர். எனவே, மாற்று வழிமுறையைக் கண்டுபிடித்து, தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved