- Home
- Tamil Nadu News
- மதுப்பிரியர்களுக்கு ஷாக் செய்தி.! டாஸ்மாக் கடைக்கு வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிப்பு
மதுப்பிரியர்களுக்கு ஷாக் செய்தி.! டாஸ்மாக் கடைக்கு வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை மது விற்பனை
மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுபான கடைகளுக்கு முன்பாக தினந்தோறும் காலையிலும் இரவிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்குகிறது. இந்த கடைகளில் 2,919 மது அருந்தும் பார்கள் உள்ளன. இதன் காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.110 கோடிக்கும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுகிறது.
கோடிகளை கொட்டும் மது விற்பனை
மது குடித்தாலே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த காலம் மலையேறிவிட்டது. தற்போது மது குடிக்காதவர்களை தான் நண்பர்களின் கூட்டத்தை விட்டு ஒதுக்கி வைக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஆண்களுக்கு இணையாக இன்றைய காலத்தில் பெண்களும் மது அருந்தி வருகிறார்கள். நைட் பார்ட்டியில் மதுகோப்பையோடு துள்ளி குதித்து வருகிறார்கள்.
டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாள் விடுமுறை
இந்த நிலையில் மது பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டுமல்ல பார்களுக்கும் அரசு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் விடுமுறை விடப்படும்.
செப்டம்பர் 5ஆம் தேதி விடுமுறை
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபியையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் அடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல் பார்கள், மதுபான விடுதிகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வார இறுதி நாள் கொண்டாட்டத்திற்கு தயாராகும் மதுபிரியர்களுக்கு டாஸ்மாக் கடை விடுமுறை செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.