MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! மார்ச் 4ம் தேதி விடுமுறை!

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! மார்ச் 4ம் தேதி விடுமுறை!

அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Feb 21 2025, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! மார்ச் 4ம் தேதி விடுமுறை!

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! மார்ச் 4ம் தேதி விடுமுறை!

அரசு விடுமுறையை தவிர்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
அய்யா வைகுண்டசாமி அவதார திருநாள்

அய்யா வைகுண்டசாமி அவதார திருநாள்

அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு அவரது அவதார நாளை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இனி தேர்வில் காப்பி அடிக்க முடியாது! மாணவர்களுக்கு செமையா ஸ்கெட்ச் போட்ட தேர்வுகள் இயக்ககம்!

35
திருநெல்வேலி உள்ளூர் விடுமுறை

திருநெல்வேலி உள்ளூர் விடுமுறை

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அய்யா வைகுண்டசாமியின் 193வது பிறந்த நாள் விழா மார்ச் 4ம் தேதி செவ்வாய்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது.

45
பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. மேற்படி மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

55
மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை வேலை நாள்

மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை வேலை நாள்

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
MK Stalin: வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றியை கூட சொல்லாத காங்கிரஸ்..! முதல்வர் பரபரப்பு ட்வீட்..
Recommended image2
TN CM Vijay: ஜோசப் விஜய் எனும் நான்..! நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..
Recommended image3
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஒரு வாரம் வெளுக்கப்போகும் கனமழை.. சென்னையிலும் வெயிலுக்கு ரெஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved