MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரு வாரத்திற்கு ஓயாமல் ஊத்தப்போகும் மழை! லிஸ்ட்ல சென்னை, கோவை இருக்கா? வானிலை மையம் சூப்பர் அப்டேட்

ஒரு வாரத்திற்கு ஓயாமல் ஊத்தப்போகும் மழை! லிஸ்ட்ல சென்னை, கோவை இருக்கா? வானிலை மையம் சூப்பர் அப்டேட்

Tamilnadu Weather: தமிழகத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 02 2026, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ஆட்டத்தை ஆரம்பிக்கும் கோடை வெயில்
Image Credit : ANI

ஆட்டத்தை ஆரம்பிக்கும் கோடை வெயில்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அதையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை மற்றும் வெயில் குறித்து வானிலை முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.

27
வறண்ட வானிலை
Image Credit : Asianet News

வறண்ட வானிலை

அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில் உள் தமிழக மாவட்டங்களிலிருந்து மத்திய கொங்கன்வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Related Articles

Related image1
2026 சட்டமன்ற தேர்தல்.. டாப் 5 பணக்கார வேட்பாளர் யார்? மலைக்க வைக்கும் சொத்து
Related image2
ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!
37
இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை
Image Credit : Asianet News

இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை

அதேபோல் நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணித்துள்ளது.

47
ஏப்ரல் 04 கனமழை எச்சரிக்கை
Image Credit : Asianet News

ஏப்ரல் 04 கனமழை எச்சரிக்கை

ஏப்ரல் 04 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் ஏப்ரல் 05 மற்றும் 06 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

57
லேசானது முதல் மிதமான மழை
Image Credit : Asianet News

லேசானது முதல் மிதமான மழை

ஏப்ரல் 07தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

67
வெப்ப நிலை நிலவரம்
Image Credit : Asianet News

வெப்ப நிலை நிலவரம்

இன்று முதல் 6ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

77
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வெப்ப அலை
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுகவும், பாஜகவும் வேறு வேறு இல்லை.. நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்..! விஜய் நம்பிக்கை
Recommended image2
Now Playing
கனிமொழி எம்.பி-யின் காரை நிறுத்திச் சோதனையிட்ட அதிகாரிகள்.! வாகனச் சோதனையின் போது நடந்ததென்ன?
Recommended image3
Now Playing
கல்லாபெட்டி கூட்டணி.! கள்ள கூட்டணி.! அப்பாடி! ரைமிங்கா போட்டு தாக்கிய விஜய்..
Related Stories
Recommended image1
2026 சட்டமன்ற தேர்தல்.. டாப் 5 பணக்கார வேட்பாளர் யார்? மலைக்க வைக்கும் சொத்து
Recommended image2
ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved