MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Tamil Nadu News
  • 2026 சட்டமன்ற தேர்தல்.. டாப் 5 பணக்கார வேட்பாளர் யார்? மலைக்க வைக்கும் சொத்து

2026 சட்டமன்ற தேர்தல்.. டாப் 5 பணக்கார வேட்பாளர் யார்? மலைக்க வைக்கும் சொத்து

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்ட முதல் 5 கோடீஸ்வர வேட்பாளர்கள்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 02 2026, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சட்டமன்ற தேர்தல்
Image Credit : Google

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சினிமா மற்றும் தொழில்துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள வேட்பாளர்களின் சொத்து மதிப்பு மலைக்க வைக்கிறது.

அசோசியேஷன் ஃபார் டெமோக்ரடிக் ரிஃபார்ம்ஸ் (ADR) மற்றும் வேட்பு மனுத் தாக்கல் தரவுகளின் அடிப்படையில், 2026 தேர்தலில் களம் காணும் டாப் 5 கோடீஸ்வர வேட்பாளர்கள் குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
விஜய் (தமிழக வெற்றிக் கழகம்)
Image Credit : Asianet News

விஜய் (தமிழக வெற்றிக் கழகம்)

அரசியலுக்குப் புதிய வரவான நடிகர் விஜய், சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இதில் விஜய்யுடன் இருக்கும் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடியும், அசையா சொத்து மதிப்பு ரூ.115 கோடியாகும். பூர்வீக சொத்தின் மதிப்பு 21.83 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தன்னிடம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாகவும், 2 பிஎம்டபிள்யு, லெக்சஸ், டோயட்டோ வெல்பயர் உள்ளிட்ட கார்கள் சொந்தமாக இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Related image1
ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!
Related image2
தவெக விஜய்யை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்: செங்கோட்டையன் தடாலடி
36
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (NDA - லட்சிய ஜனநாய கட்சி)
Image Credit : Asianet News

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (NDA - லட்சிய ஜனநாய கட்சி)

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான இவர், சுமார் ரூ.597 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். 339 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், சார்லஸ் மார்ட்டினுக்கு 20.59 லட்சமும் அவரது மனைவியிடம் ஒரு கோடியை 82 லட்சமும் பல்வேறு வங்கிகளில் 2.03 கோடியும், சுமார் 64க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் 74.28 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். வேட்பாளரிடம் 25.67 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும், அவரது மனைவியிடம் 5.35 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும், 44.87 கோடி மதிப்புலான வைரங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

46
எஸ்.பி. வேலுமணி (அதிமுக)
Image Credit : Asianet News

எஸ்.பி. வேலுமணி (அதிமுக)

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. இவர் சுமார் ரூ.150 முதல் 180 கோடி (உத்தேசமாக) மதிப்பிலான சொத்துக்களைக் வைத்திருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

56
நயினார் நாகேந்திரன் (பாஜக)
Image Credit : X/@NainarBJP

நயினார் நாகேந்திரன் (பாஜக)

திருநெல்வேலி பகுதியில் ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. நயினார் நாகேந்திரன் மீதுள்ள அசையும் சொத்து மதிப்பு ரூ.12 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.1.91 கோடி, மொத்த கடன் ரூ.2.61 கோடி. இவரது மனைவி சந்திரா மீதுள்ள அசையும் சொத்து மதிப்பு ரூ.12.03 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.5.98 கோடி. மொத்த கடன் ரூ.2.52 கோடியாகும்.

66
ஆதவ் அர்ஜூனா (வில்லிவாக்கம் தொகுதி)
Image Credit : x/Aadhav Arjuna

ஆதவ் அர்ஜூனா (வில்லிவாக்கம் தொகுதி)

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா, தனக்கு ரூ.197 கோடி சொத்து இருப்பதாகவும், அவரது மனைவி டெய்சியின் சொத்து மதிப்பு ரூ.245 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆதவ் அர்ஜூனா தன்னிடம் ரூ.2.29 கோடி மதிப்புள்ள 1691 கிராம் தங்கம் உள்ளதாக கூறியுள்ளார். ஆதவின் மனைவி டெய்சியிடம் ரூ.3.01 கோடி மதிப்புள்ள 2225.62 கிராம் தங்கமும், ரூ.60.27 லட்சம் மதிப்புள்ள 24109 கிராம் வெள்ளியும், ரூ.6.16 கோடி மதிப்புள்ள வைர ஆபரணங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
டிவி.கே. விஜய்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tomorrow Power Cut: நாளைக்கு பவர் கட்..உங்க ஊர் பெயர் இருக்கா? முழு லிஸ்ட்டையும் செக் பண்ணுங்க!
Recommended image2
Investment: லண்டனில் முதல்வர் விஜய்... ஆட்டோமொபைல், க்ரீன் எனர்ஜியில் குவியும் முதலீடுகள்!
Recommended image3
Digital Driving Licence: லைசென்ஸ் இனி கையில் வராது! இன்று முதல் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்
Related Stories
Recommended image1
ஏப்ரல் மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்? பகீர் எச்சரிக்கை.! அலறும் பொதுமக்கள்!
Recommended image2
தவெக விஜய்யை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்: செங்கோட்டையன் தடாலடி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved