MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தை நெருங்கும் ஆபத்து.. மீண்டும் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தை நெருங்கும் ஆபத்து.. மீண்டும் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 07 2026, 07:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
Image Credit : our own

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிபொழிவு நிலவி வந்த நிலையில் கனமழை குறித்து வானிலை மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. அதாவது தென்கிழக்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில், மட்டகிளப்பிற்கு (இலங்கை) கிழக்கு தென்கிழக்கே சுமார் 790 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு - தென்கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 1150 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 1270 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
வறண்ட வானிலை
Image Credit : our own

வறண்ட வானிலை

இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

Related Articles

Related image1
பொங்கல் முடிந்தும் மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!
Related image2
தமிழகம் முழுவதும் நாளை (08.01.2026) 8 மணி நேரம் மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
37
கனமழை எச்சரிக்கை
Image Credit : Google

கனமழை எச்சரிக்கை

அதேபோல் நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

47
ஜனவரி 9ம் தேதி
Image Credit : Google

ஜனவரி 9ம் தேதி

கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

57
ஜனவரி 10ம் தேதி
Image Credit : Google

ஜனவரி 10ம் தேதி

வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர். கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

67
ஜனவரி 11ம் தேதி
Image Credit : Google

ஜனவரி 11ம் தேதி

வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை வேலூர். திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

77
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (08-01-2026: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Supplementary Examination: மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா? கவலை வேண்டாம்! துணைத்தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image2
Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!
Recommended image3
TASMAC: அதிரடி காட்டும் முதல்வர் விஜய்.. குவாட்டருக்கு எக்ஸ்ட்ரா ரூ.10 கேட்டால் ஆப்பு! குஷியில் குடிமகன்கள்!
Related Stories
Recommended image1
பொங்கல் முடிந்தும் மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!
Recommended image2
தமிழகம் முழுவதும் நாளை (08.01.2026) 8 மணி நேரம் மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved