- Home
- Tamil Nadu News
- பொங்கல் முடிந்தும் மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!
பொங்கல் முடிந்தும் மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!
Republic Day Holidays: தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறையைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் மீண்டும் தொடர் விடுமுறைகள் வரவுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்களும், குடியரசு தினத்தை முன்னிட்டு 3 நாட்களும் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

மாணவர்களுக்கு கொண்டாட்டம்
தமிழகத்தில் விடுமுறை என்றாலே பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்து விட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி முதல் தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து டிசம்பர் 24ம் தேதி புதன் கிழமை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. முதலில் 9 நாட்கள் மட்டுமே விடுமுறை என கூறப்பட்டு வந்தது.
அரையாண்டு தேர்வு விடுமுறை
ஆனால் பள்ளி ஆண்டு நாட்காட்டியில் ஏற்கெனவே கூறியபடி ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. இதன்மூலம் எப்போதும் இல்லாத வகையில் மொத்தம் 12 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வந்தனர்.
தொடர் விடுமுறை
பின்னர் பள்ளிகள் ஜனவரி 5ம் தேதி மீண்டும் திறந்து நடைபெற்று வரும் நிலையில் அடுத்த தொடர் விடுமுறை எப்போது கிடைக்கும் பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஹேப்பியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை
பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. ஜனவரி 15 வியாழக்கிழமை தை பொங்கல், ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் திருநாள் வருகிறது. ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாள் அதாவது ஜனவரி 14ம் தேதி புதன் கிழமை போகி என்பதால் அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்த விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
குடியரசு தினத்திற்கு 3 நாட்கள் விடுமுறை
அதுமட்டுமல்லாமல் ஜனவரி மாதம் இறுதியில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது. ஜனவரி 26ம் தேதி திங்கள் கிழமை குடியரசு தினம் வருகிறது. இதற்கு முந்தை நாட்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதால் மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றனர்.

