MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுது? வானிலை மையம் முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுது? வானிலை மையம் முக்கிய அப்டேட்!

Tamilnadu Heavy Rain:தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்கள் என்பதை பார்ப்போம். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 04 2025, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Tamil Nadu weather update

Tamil Nadu weather update

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். இந்நிலையில் வரும் நாட்களில் கனமழை இருக்கா என்பது குறித்து வானிலை மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. chennai meteorological department

26
Tamilnadu Heavy Rain

Tamilnadu Heavy Rain

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

அதாவது தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று  தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. Heavy Rain

இதையும் படிங்க: வானிலை: இன்றும் நாளையும் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பிச்சு உதற போகுதாம்!

36
Heavy Rain

Heavy Rain

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

46
TN Rain News

TN Rain News

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் 6  முதல் 10ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: வானிலை: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை ஊத்தப்போகுதாம்!

56
Temperature

Temperature

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 

இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய  மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதேபோல் ஏப்ரல் 6 முதல் 8ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ்  வரை படிப்படியாக உயரக்கூடும்.

66
Chennai Rain

Chennai Rain

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை  34°  செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°  செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.  அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை  34-35°  செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°  செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.  Chennai weather report

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வெப்ப அலை
கோடைக்காலம்

Latest Videos
Budget 2026 : SIP Calculator
Monthly Investment
₹
Expected Annual Return
%
Investment Duration
Yr
Recommended Stories
Recommended image1
எல்லாமே ஏமாற்று வேலை தானா..? ஜனவரியில் ஓய்வு பெற்ற 5000 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? அன்புமணி கேள்வி
Recommended image2
நம் தேசத்திற்கு எதிரானவர் உதயநிதி..! பியூஸ் கோயல் கடும் குற்றச்சாட்டு
Recommended image3
விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. கடந்த ஆண்டை விட ரூ.5,960 கூடுதல் விலை.. முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved