MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வானிலை: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை ஊத்தப்போகுதாம்!

வானிலை: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை ஊத்தப்போகுதாம்!

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 03 2025, 10:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

குமரிக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சென்னைக்கு மழையா? 

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்திருந்தது. 

இதையும் படிங்க: கோடை மழை கொட்டு கொட்டுன்னு கொட்ட போகுதாம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

35

தமிழகத்தில் மதுரை, தேனி, திருவாரூரில் பரவலாக மழை

அதன்படி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த பெய்தது.  அதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான திருமங்கலம் நகர், பாண்டியன் நகர், வடகரை, கரிசல்பட்டி, கற்பகநகர், காமராஜபுரம், செங்குளம் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இரவிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இன்று காலை விழுப்புரம், மதுரை, தேனி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

45

சென்னையில் மழை

கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் சென்னையில் பல்லாவரம், அனகாபுத்தூர், கிண்டி, எழும்பூர், போரூர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

55

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை

இதனிடையே தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
தமிழ்நாடு வானிலை
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வானிலை
மழை செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved