வடகிழக்கு பருவமழை எப்போது முடிகிறது? மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டம் தெரியுமா?
வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை எப்போது முடிகிறது? மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய நிலையில் எப்போதும் இல்லாத வகையில் அனைத்து மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தரமான சம்பவம் செய்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை எப்போது முடியப்போகிறது என்ற தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Northeast Monsoon
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதேபோல் 28ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Tamilnadu Rain
29ம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Heavy Rain
மேலும் 31ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Tamilnadu Weather Update
பிப்ரவரி 01ம் தேதி உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Chennai Rain
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
Chennai Weather Update
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.