தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை? இந்த 6 மாவட்டங்கள் அலறப்போகுதாம்! ! லிஸ்ட்ல சென்னையும் இருக்கா?
TN Heavy Rain Alert: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Northeast Monsoon
நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பாராத விதமாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், மழை பெய்தாலே பொதுமக்கள் ஒரு வித பயத்திலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Tamilnadu Heavy Rain
அதன்படி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்! ஒரு மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கலாம்! எப்படி தெரியுமா?
Tamilnadu Rain
இதன் காரணமாக இன்று வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Tamilnadu Rain News
அதேபோல் நாளை வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Chennai Rain
19ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20 முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.