- Home
- Tamil Nadu News
- மக்களே உஷாரா இருங்க! அடுத்த 3 மணி நேரம் டேஞ்சர்! விடாமல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை!
மக்களே உஷாரா இருங்க! அடுத்த 3 மணி நேரம் டேஞ்சர்! விடாமல் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குதற்கு முன்னதாகவே நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்பாராத வகையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து தமிழகத்துக்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தேதி தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தியது. இதனால் நீர் நிலைகள் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில் மழை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை
தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
8 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்
இந்நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.