MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அய்யய்யோ.. வானிலை மையத்தில் இருந்து வந்த உச்சகட்ட அலர்ட்! அலறும் பொதுமக்கள்

அய்யய்யோ.. வானிலை மையத்தில் இருந்து வந்த உச்சகட்ட அலர்ட்! அலறும் பொதுமக்கள்

Tamilnadu Rain: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெப்பநிலை மேலும் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 25 2026, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Image Credit : our own

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கரூர், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் காலை 8 மணி முதல் மாலை 4 வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அதுமட்டுல்லாமல் வீட்டில் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடியவில்லை. மார்ச் மாதத்திலேயே வெயில் இப்படி என்றால் மே மாதம் எப்படி இருக்குமோ என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியில் 2-4° செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

24
வறண்ட வானிலை
Image Credit : Asianet News

வறண்ட வானிலை

அதாவது இன்று முதல் 27ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 28 முதல் 31ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
பெட்டி பெட்டியாக தக்காளி! மூட்டை மூட்டையாக வெங்காயம்! பை நிறைய அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்!
Related image2
தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம்?
34
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
Image Credit : our own

வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதேபோல் மார்ச் 27 முதல் 29 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.

44
சென்னை வானிலை அப்டேட்
Image Credit : our own

சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
வானிலை
வானிலை அறிக்கை
Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழ்நாட்டில் ரெக்கார்டு பிரேக்கிங் வாக்குப்பதிவை கண்ட தேர்தல் பற்றி தெரியுமா?
Recommended image2
அடிதூள்.. மூன்று நாட்கள் விடுமுறை! பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு போக்குவரத்துறை குஷியான அறிவிப்பு!
Recommended image3
தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம்?
Related Stories
Recommended image1
பெட்டி பெட்டியாக தக்காளி! மூட்டை மூட்டையாக வெங்காயம்! பை நிறைய அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்!
Recommended image2
தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved