MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vegetables price : தக்காளி விலை கூடியதா.? குறைந்ததா.? கோயம்பேட்டில் ஒரு கிலோ காய்கறி விலை நிலவரம் என்ன.?

Vegetables price : தக்காளி விலை கூடியதா.? குறைந்ததா.? கோயம்பேட்டில் ஒரு கிலோ காய்கறி விலை நிலவரம் என்ன.?

மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து மாறுபடுகிறது, சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. தக்காளி, வெண்டைக்காய் போன்றவற்றின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை பட்டியல் இங்கே.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Sep 05 2024, 07:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

காய்கறி விலை என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. மழை மற்றும் வெயிலின் தாக்கத்தை பொறுத்து காய்கறிகளின் விளைச்சல் கூடவும் மற்றும் குறையவும் செய்துகிறது. இதன் காரணமாக ஒரு சில காய்கறிகளின் உற்பத்தி குறைந்தால் வரத்தும் குறைகிறது. இதனால் விலையானது உச்சத்தை அடையும் அந்த வகையில் கடந்த சில நாட்களாக கேரட், அவரை, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலையானது அதிகரித்து காணப்படுகிறது.
 

26

சரிந்த தக்காளி விலை

அதே நேரத்தில் தக்காளி, வெண்டைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் விளைச்சர் அதிகமாக இருப்பதால் சென்னை கோயம்பேட்டிற்கு அதிகளவு காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இதனால் விற்பனை விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்வரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்டது. இதே போல வெண்டைக்காய் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

36

வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

46
Vegetables Price Today

Vegetables Price Today

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒன்று 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ35ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

56

முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒன்று 20 ரூபாய்க்கும், கொத்தவரை 1 கிலோ 55 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 1 கிலோ 20 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

66

வெண்டக்காய் விலை என்ன.?

இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீக்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா - வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்...
Recommended image2
6 மணி நேரம்.. விடாத அதிகாரிகள்.. சிபிஐ முன் செந்தில் பாலாஜி சொன்ன 'அந்த' ரகசியம்!
Recommended image3
ஒரு வேட்பாளர் எத்தனை லட்சம் செலவு செய்யலாம்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved