விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!
Continuous Holiday: விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
Tamilnadu Government
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் தமிழக போக்குவரத்துத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் சொந்த ஊர் செல்லவும் ஆன்மிக தலங்களுக்கு செல்லவும் சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Vinayagar Chaturthi
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: செப்டம்பர் 6 (வெள்ளிக்கிழமை சுபமூகூர்த்தம்), செப்டம்பர் 7 (சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி), செப்டம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 5, 6, 7 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: School College Holiday: ஹேப்பி நியூஸ்! செப்டம்பர் 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Government Bus Special
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 5, 6, 7, 8 அன்று கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Weekend Special Buses
சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 6, 7 அன்று 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Teacher: லீவு விஷயத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! பள்ளிக் கல்வித்துறை அதிரடி!
Ticket Booking
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 23,514 பயணிகளும் சனிக்கிழமை அன்று 6,961 பயணிகளும் ஞாயிறு அன்று 21,650 பயணிகளும் பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
TNSTC
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே. பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.