MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ICU-வில் எச்.ராஜா.. மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த ஸ்டாலின், உதயநிதி.. பாஜகவினர் நெகிழ்ச்சி!

ICU-வில் எச்.ராஜா.. மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த ஸ்டாலின், உதயநிதி.. பாஜகவினர் நெகிழ்ச்சி!

எச்.ராஜா குடும்பத்தினரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், எந்த உதவி கேட்டாலும் அரசு செய்து தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் முதல்வர் கேட்டறிந்தார்.

1 Min read
Author : Rayar r
Published : Feb 01 2026, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 எச்.ராஜாவுக்கு உடல்நலக்குறைவு
Image Credit : Asianet News

எச்.ராஜாவுக்கு உடல்நலக்குறைவு

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மேடையிலேயே எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். அவர் நிலைதடுமாறி கீழே விழப் பார்த்தபோது, அங்கிருந்த நிகழ்ச்சியின் நெறியாளர் உடனடியாகச் செயல்பட்டு அவரைத் தாங்கிப் பிடித்தார். அவருக்கு அங்கேயே அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

24
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை
Image Credit : Asianet News

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை

முதலுதவிக்குப் பிறகும் அவர் இயல்பு நிலைக்குத் திரும்புவதில் சிரமம் இருந்ததால், உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உடல் நலம் விசாரித்த ஸ்டாலின், உதயநிதி

இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எச்.ராஜா குடும்பத்தினரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், எந்த உதவி கேட்டாலும் அரசு செய்து தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் முதல்வர் கேட்டறிந்தார்.

Related Articles

Related image1
மேடையில் மயங்கி விழுந்த எச்.ராஜா.. ICU-வில் தீவிர சிகிச்சை.. என்னாச்சு?
Related image2
H.ராஜாவுக்கு பக்கவாதம்! முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய திமுக டாக்டர்! வெளியான தகவல்
34
அரசியல் நாகரீகம்; பாஜகவினர் நெகிழ்ச்சி
Image Credit : Asianet News

அரசியல் நாகரீகம்; பாஜகவினர் நெகிழ்ச்சி

அரசியல் களத்தில் திமுகவும், பாஜகவும் பாம்பும், கீரியுமாக உள்ளன. இரு கட்சிகளும் அரசியல்ரீதியாக ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதேபோல் எச்.ராஜாவும் தொடர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் அரசியல் நாகரீகம் கருதி ஸ்டாலினும், உதயநிதியும் எச்.ராஜாவிடம் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து இருப்பது பாஜகவினர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44
அரசியல் களம் தாண்டி எச்.ராஜாவும், ஸ்டாலினுக்கும் நெருக்கம்
Image Credit : our own

அரசியல் களம் தாண்டி எச்.ராஜாவும், ஸ்டாலினுக்கும் நெருக்கம்

'இதுதான் தமிழ்நாடு; இதுதான் திமுகவின் குணம்' என உடன்பிறப்புகளும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அரசியல் களம் என்பதை தாண்டி ஸ்டாலின் குடும்பத்துக்கும், எச்.ராஜா குடும்பத்துக்கும் தனிப்பட்ட முறையில் நெருக்கம் உள்ளதும், எச்.ராஜாவின் பல்வேறு குடும்ப நிகழ்வுகளில் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எச். ராஜா
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Budget 2026 : SIP Calculator
Monthly Investment
₹
Expected Annual Return
%
Investment Duration
Yr
Recommended Stories
Recommended image1
பத்திரிகையாளர் லியோ ஸ்டாலின் கைது.. பழைய வழக்கை தூசி தட்டி காவல்துறை அதிரடி!
Recommended image2
பிப்ரவரி மாதத்தில் பிச்சு உதறப்போகும் மழை.. வானிலை மையம் முக்கிய அப்டேட்
Recommended image3
Now Playing
கரூரில் செய்தியாளர்களை தாக்கியகுண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேம்நாத் அதிரடி
Related Stories
Recommended image1
மேடையில் மயங்கி விழுந்த எச்.ராஜா.. ICU-வில் தீவிர சிகிச்சை.. என்னாச்சு?
Recommended image2
H.ராஜாவுக்கு பக்கவாதம்! முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய திமுக டாக்டர்! வெளியான தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved