- Home
- Tamil Nadu News
- துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் வீட்டை தட்டி மிரட்டல்.! ஆளுநர் ரவி சொன்ன ஷாக் தகவல்
துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் வீட்டை தட்டி மிரட்டல்.! ஆளுநர் ரவி சொன்ன ஷாக் தகவல்
தமிழக ஆளுநர் ரவிக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது. உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை. இதற்கு ஆளுநர் ரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

MK Stalin RN Ravi
Governor Ravi complains that Vice Chancellors were threatened : தமிழக ஆளுநருக்கும் - தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்ட ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இதனையடுத்து ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் 10 சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து முதலமைச்சருக்கு வந்தது. மேலும் பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் இருப்பார் என தகவல் வெளியானது.
Vice Chancellors were threatened
ஆனால் இந்த தகவலை ஆளுநர் மாளிகை மறுத்திருந்தது. அதன் படி துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழக அரசிடம் இருப்பதாகவும், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தொடர்கிறார் என கூறியிருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு இன்று மற்றும் நாளை ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26 தேதி) உதகையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஆளுநர் ரவி மேற்கொண்டிருந்தார். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 19 அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், 9 தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் மத்திய பல்கலை துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்படது.
Governor Ravi complains
இதனிடையே இன்று உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை துணை குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. 41 பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 9 துணைவேந்தர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த 9 பேரும் மத்திய அரசு மற்றும் தனியார் துறை துணைவேந்தர்களாவர். இதனையடுத்து துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ரவி, மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
Governor RN Ravi
வீடு திரும்ப முடியாது என மிரட்டல்
கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாநில அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லையென கூறினார். துணைவேந்தர்களின் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டி கூட்டத்தில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபோன்று ஒரு அசாதாரண சூழல் முன்னெப்போதும் ஏற்பட்டது இல்லையென தெரிவித்த ஆளுநர் ரவி ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடப்பது பிடிக்கவில்லையென கூறினார்.