தமிழக அரசோடு எந்த மோதலும் இல்லை.! வெள்ளைக்கொடி காட்டிய ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ரவி தலைமையில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படவுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணியில் இந்த மாநாடு பேசுபொருளாகி உள்ளது. ஆளுநர் மாளிகை, அரசுக்கு எதிரான மோதல் இல்லை என விளக்கமளித்துள்ளது.

No conflict between RN Ravi and the state government தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநர் ரவி தலைமையில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படவுள்ளது. உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நிலையில், இந்த துணை வேந்தர்கள் மாநாடு பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக அதிகார மோதல் எதுவும் இல்லையென ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
RN RAVI in university
முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை
சமீப நாட்களில், மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் வருடாந்திர மாநாட்டை ஆளுநர் மாளிகை மற்றும் மாநில அரசுக்கு இடையிலான அதிகாரப்பூர்வ மோதல் எனத் தவறாக காட்சிப்படுத்தும் சில தவறான ஊடக செய்திகள் பரப்பப்படுகிறது. இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது. 2022-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில், தமிழ்நாடு ஆளுநரால் உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் மாநாடு திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
No conflict between RN Ravi and the state government
துணை வேந்தர்கள் மாநாடு ஏன்.?
இதில், தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் தொழில்துறையை சேர்ந்த சிறந்த நிபுணர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இம்மாநாட்டில் கல்வி நிறுவனங்களை முன்னேற்றும் புதிய சவால்கள், வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பற்றி விவாதிக்கப்படுகின்றன. மாணவர்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்காக அவர்களது நிறுவனங்களை எப்படி போட்டித் திறன் வாய்ந்ததாக மாற்றலாம் என்பது குறித்தும் உரையாடல்கள் நடைபெறுகின்றன.
RN Ravi and state government
ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இல்லாமல் இருந்தது
இம்மாநாடுகளின் நேரடி பலன்கள், கணக்கீடு செய்யக்கூடிய அளவுகோள்களில் தற்போது தெளிவாக தெரிகிறது. முன்னர், குறிப்பாக மாநில பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட்டு ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இல்லாமல் செயல்பட்டன. இது மாணவர்களுக்கு இழப்பாகவும், கல்வி வளர்ச்சிக்குப் பாதகமாகவும் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டுக்கான திட்டமிடல் சில மாதங்கள் முன்னதாகவே தொடங்கப்படுகிறது.
Vice-Chancellors Ooty Conference
ஜனவரி மாதமே தயாரிப்புகள் தொடங்கப்பட்டது
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்வி, தொழில்நுட்ப நிபுணர்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாநாட்டின் வடிவம், விவாதிக்கப்படும் தலைப்புகள் மற்றும் உரையாற்ற வேண்டிய நிபுணர்கள் குறித்து முடிவெடுக்கப்படுகின்றது. தொடர்புகொண்டு அவர்களை பங்கேற்பதற்கான முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டும் ஜனவரி மாதமே தயாரிப்புகள் தொடங்கப்பட்டது. பல கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனுள்ள மாநாடாக மாற்றப்பட்டுள்ளது.
Vice-Chancellors Conference
ஆளுநர் - மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி
கல்வி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக நடத்தப்படும் நன்னெறி மற்றும் நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்விச் செயற்பாட்டை, சில ஊடகங்கள் தவறாக விளக்கி, சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் இணைத்து, இதை தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கதாகும். இவை அனைத்தும் மாண்பை குலைப்பதாகவும், உண்மைக்கு புறம்பாகவும் இருக்கின்றது என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.