MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிகாலையிலேயே கோர விபத்து! 5 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலி! நடந்தது என்ன?

அதிகாலையிலேயே கோர விபத்து! 5 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலி! நடந்தது என்ன?

கரூர் அருகே பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கோவையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Feb 26 2025, 08:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Car Accident

Car Accident

கரூர் மாவட்டம் குளித்தலை கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் - காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் காரில் பயணித்த 2 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Government bus

Government bus

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி ஒரு வழியாக பேருந்து அடியில் சிக்கி இருந்த காரை மீட்டனர். 

34
Karur Accident

Karur Accident

மேலும் விபத்தில்  உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ், அவரது  மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோர் தஞ்சாவூர் ஒரத்தநாடு  கீழையூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்மிட சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

 

44
Accident News

Accident News

காரை ஒட்டி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
AIADMK Split 2026: இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?
Recommended image2
TVK VIJAY: பெரும்பான்மை கொடுத்த தைரியம்.! போலீசாருக்கு முழு அதிகாரம்.! ஜெயலலிதா பாணியில் அடித்து விளையாட போகும் முதல்வர் விஜய்.!
Recommended image3
Ricky Radhan Pandit: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழங்கிய ஒற்றை பெயர்..! யார் இந்த ராதன் பண்டிட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved