- Home
- Tamil Nadu News
- அரசு ஊழியர்களை தொடர்ந்து ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! 2 மடங்கு உயர்வு! தமிழக அரசு சரவெடி அறிவிப்பு!
அரசு ஊழியர்களை தொடர்ந்து ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! 2 மடங்கு உயர்வு! தமிழக அரசு சரவெடி அறிவிப்பு!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணத்தை உயர்த்திய நிலையில் அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதாவது அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்காக 9 அறிவிப்புகள்
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 28ம் தேதி சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4000 த்திலிருந்து ரூ.6000ஆக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.
52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்
இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில்: முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு மாநில சிவில் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், ரூ.4000 இருந்து ரூ.6000 உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. இந்த உயர்வால் சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.10 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
பரிசு தொகை உயர்வு
அதேபோன்று, பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு தொகை ரூ.500ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கி அரசு ஆணையிடுகிறது.
அரசுக்கு ரூ.24 கோடி கூடுதல் செலவு
இதன்மூலம் சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.24 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இந்த பண்டிகை முன்பணம் உயர்வு இந்த அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வரும். இந்த பண்டிகை முன்பணம், 10 மாதங்களுக்கு சமமான தவணைகளில் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.