GOLD : நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.! தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது விலையானது சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.
ஏறி, இறங்கும் தங்கத்தின் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. குறிப்பாக சேமிப்பாகவும், தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமணத்திற்காகவும் சாதராண மக்கள் முதல் உயர் வகுப்பு மக்கள் வரை வாங்கி வருகின்றனர்.
உச்சத்தை தொடும் தங்கம் விலை
கடந்த வருடம் ஒரு சவரன் தங்கத்தின் விலை 35ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நீடித்து தற்போது தங்கத்தின் விலையானது கிடு, கிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் 50ஆயிரத்தை கடந்தும் தங்கத்தின் விலை உயர சென்றுகொண்டுள்ளது.
Ola S1X Vs Bajaj Chetak 2901 : ஓலா? பஜாஜ் சேடக்? இதில் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.?
தங்கத்தில் முதலீடு
தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. இதன் காரணமாகவே நிலத்தில் முதலீடு செய்யும் மக்கள் தங்கத்தின் மீதும் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
வங்கியில் பணம் செலுத்தினால் அதற்கு வட்டி விகிதம் குறைவாக உள்ளது. பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளது.
குறைந்தது தங்கத்தின் விலை
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக 55ஆயிரம் ரூபாயை கடந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சரிய தொடங்கியுள்ளது. அந்த வகையில், நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,650-ஆக விற்பனையானது.. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,120-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.56,960-ஆக விற்பனையானது.
மக்கள் மகிழ்ச்சி
இந்தநிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6,630 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 53ஆயிரத்து 040ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையானது சற்று குறைந்து வருவதால் பொது மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.