MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • New Ration card: புதிய ரேஷன் கார்டுக்கு கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை- அரசின் புது ரூல்ஸ் தெரியுமா?

New Ration card: புதிய ரேஷன் கார்டுக்கு கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை- அரசின் புது ரூல்ஸ் தெரியுமா?

New Ration card: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு LPG கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமாக இல்லை என உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது.

2 Min read
Author : Asianet News
Published : Sep 07 2026, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரேஷன் கார்டுக்கு கேஸ் ரசீது தேவையா?
Image Credit : pinterest

ரேஷன் கார்டுக்கு கேஸ் ரசீது தேவையா?

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது LPG கேஸ் கனெக்‌ஷன் விவரங்கள் ஏன் முக்கியம்? என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது. குறிப்பாக, சில இடங்களில் கேஸ் சிலிண்டர் ரசீது கேட்கப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், தற்போது தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை இதுகுறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விவரங்கள் சரிபார்ப்பு
Image Credit : pinterest

விவரங்கள் சரிபார்ப்பு

தமிழகத்தில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது குடும்பத்தின் விவரங்கள், முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதற்குக் காரணம், ஒரே குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் இடம்பெறுகிறதா? குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வசிப்பிட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை நிர்வாக ரீதியாக சரிபார்ப்பதற்கு.

Related Articles

Related image1
Ration Card: ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் உதவித்தொகை நிறுத்தம்! அத்தனை சலுகைகளும் ரத்தாகுமா?
Related image2
Ration Card: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த விஷயத்தை செய்யாட்டி ரேஷன் பொருள் கட்? முழு விவரம்!
34
தற்போதைய பிரச்சனை என்ன?
Image Credit : pinterest

தற்போதைய பிரச்சனை என்ன?

சமீபத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த சிலரிடம் கேஸ் சிலிண்டர் ரசீதை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று சில இ-சேவை மையங்கள் மற்றும் உள்ளூர் அலுவலர்கள் கூறியதாக புகார்கள் எழுந்தன. இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் பலரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

44
உணவுப்பொருள் வழங்கல் துறை தரப்பில் விளக்கம்
Image Credit : pinterest

உணவுப்பொருள் வழங்கல் துறை தரப்பில் விளக்கம்

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது LPG கேஸ் சிலிண்டர் ரசீதை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் சில இ-சேவை மையங்களில் கேஸ் ரசீது கட்டாயம் எனக் கூறப்பட்டதால் பொதுமக்களிடம் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

என்ன ஆவணங்கள் தேவை?

துறையின் விளக்கப்படி, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் விவரங்கள் முக்கியமாகப் பதிவேற்ற வேண்டும். அதன்பிறகு, குடும்பத்தின் முகவரியை (Address) உறுதிப்படுத்தும் ஆவணமாக சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்தப் பத்திரம், மின் கட்டண ரசீது அல்லது கேஸ் சிலிண்டர் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

60 நாட்கள் அவகாசம்

மேலும், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள், தேவையான ஆவணங்களை முழுமையாகச் சமர்ப்பித்திருந்தால், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து இறுதி முடிவு எடுக்க அரசுக்கு 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது.

உதவி எண்

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது, ஏற்கனவே அளித்த விண்ணப்பத்தின் நிலையைப் பார்ப்பது, முகவரியை மாற்றுவது, குடும்பத்தில் புதிய உறுப்பினரைச் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைனிலேயே பயன்படுத்திக்கொள்ளலாம்.

குடும்ப அட்டை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால், 1967 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

AN
Asianet News
Asianet News is a trusted name in Indian journalism, known for delivering accurate, timely, and impactful news. With decades of experience, we excel in covering regional, national, and international stories, ensuring our readers stay informed about the topics that matter most.Whether through breaking news, investigative features, or nuanced opinion pieces, Asianet News remains your reliable source for comprehensive and credible content.Stay connected with Asianet News for stories that matter
குடும்ப அட்டை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பதில் சொல்ல முடியாமல் திசை திருப்பும் விஜய் ! – உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி
Recommended image2
Udhayanidhi Stalin: "ரோல் கேமரா, ஆக்‌ஷன்!" - அடுத்த முறையாவது நல்லா ரெடி பண்ணிட்டு வாங்க... விஜய்யை சீண்டிய உதயநிதி!
Recommended image3
CM Vijay : திமுகவை சிக்க வைக்கும் 3 ஃபைல்ஸ்? சட்டசபையில் விஜய் பேசியது என்ன?
Related Stories
Recommended image1
Ration Card: ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்காவிட்டால் உதவித்தொகை நிறுத்தம்! அத்தனை சலுகைகளும் ரத்தாகுமா?
Recommended image2
Ration Card: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த விஷயத்தை செய்யாட்டி ரேஷன் பொருள் கட்? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved