MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Ration Card: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த விஷயத்தை செய்யாட்டி ரேஷன் பொருள் கட்? முழு விவரம்!

Ration Card: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த விஷயத்தை செய்யாட்டி ரேஷன் பொருள் கட்? முழு விவரம்!

Ration Card: ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் கைரேகையை பதிவு செய்வது கட்டாயம் ஆகும். பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் பொருள் கட் ஆகுமா? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
| Updated : Aug 02 2026, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஏழை மக்களின் வாழ்வாதாரம் ரேஷன் கடைகள்
Image Credit : DH

ஏழை மக்களின் வாழ்வாதாரம் ரேஷன் கடைகள்

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே அத்தியாவசிய தேவையாக உள்ளது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Magalir Urimai Thogai) உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு குடும்ப அட்டை (Ration Card) மிக முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரேஷன் கடையில் கைரேகையை பதிவு செய்ய சிறப்பு முகாம்
Image Credit : Asianet News

ரேஷன் கடையில் கைரேகையை பதிவு செய்ய சிறப்பு முகாம்

இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் இ-கே ஒய் சி (e-kyc) பதிவு சிறப்பு முகாம் ஆகஸ்ட் 2-ஆம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் இன்று அனைத்து நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட வேண்டும்.

அருகில் உள்ள ரேஷன் கடைக்கு செல்லுங்கள்

பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம். எனவே, அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரல் ரேகைப் பதிவை விடுதலின்றி முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Related image1
New Ration Card: புதிய ரேஷன் கார்டு எப்போ கிடைக்கும்? காத்திருந்த மக்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.!
Related image2
Ration Card: ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றணுமா? மக்களே அலையாதீங்க.. 5 நிமிடம் போதும்.. சிறப்பு முகாம்!
34
சிறப்பு முகாம் நேரங்கள்
Image Credit : DH

சிறப்பு முகாம் நேரங்கள்

நியாயவிலைக் கடைகளில் வழக்கமாக நடைபெறும் இந்த இ-கேஒய்சி (e-KYC) சிறப்பு முகாம்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். இன்றைய சிறப்பு முகாம் தவிர்த்து, வழக்கமான வேலை நாட்களிலும் ரேஷன் கடைகளுக்குச் சென்று இ-கேஒய்சி பதிவை மேற்கொள்ளலாம்.

e-KYC செய்யத் தேவையான ஆவணங்கள்

ரேஷன் கார்டு நகல் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் ஆதார் அட்டை (Aadhaar Card) கண்டிப்பாகத் தேவை. விரல்ரேகை ரேஷன் கடையில் உள்ள POS (Point of Sale) இயந்திரத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதால், ரேஷன் கார்டில் பெயருள்ள அனைவரும் நேரில் செல்ல வேண்டும்.

44
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வசதி
Image Credit : Asianet News

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வசதி

வயதானவர்கள் அல்லது உழைப்பாளர்களில் சிலருக்குக் கைரேகை சரியாகப் பதியவில்லை என்றால், கண் விழித்திரை (Iris Scanner) ஸ்கேனர் மூலம் இ-கேஒய்சி பதிவு செய்யப்படும். நகர்ந்து செல்ல முடியாத முதியவர்கள் மற்றும் கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு, ரேஷன் கடை ஊழியர்கள் வீட்டுக்கே வந்து (Doorstep Service) பயோமெட்ரிக் பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தில் பெயன் பெற உள்பட பல்வேறு பயன்பெற குடும்பத்தில் அனைவரும் கைரேகையை பதிவு செய்வது அவசியம் ஆகும். நீங்கள் கைரேகையை பதிவு செய்யவில்லை என்றால் ரேஷன் பொருள் கட் ஆகலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரேஷன் கடை
குடும்ப அட்டை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கண்ணூர்: கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த வெள்ளம் ! பொதுமக்கள் கடும் அவதி !
Recommended image2
Now Playing
எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!– அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி
Recommended image3
Now Playing
Kolathur EVM : கொளத்தூரில் EVM மோசடி? மாறுமா ரிசல்ட்? அடுத்து நடக்கப்போவது என்ன?
Related Stories
Recommended image1
New Ration Card: புதிய ரேஷன் கார்டு எப்போ கிடைக்கும்? காத்திருந்த மக்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.!
Recommended image2
Ration Card: ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றணுமா? மக்களே அலையாதீங்க.. 5 நிமிடம் போதும்.. சிறப்பு முகாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved