MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தின் வருங்கால முதல்வர் நயினார்! அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த பாஜக நிர்வாகிகள்!

தமிழகத்தின் வருங்கால முதல்வர் நயினார்! அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த பாஜக நிர்வாகிகள்!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளன. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 17 2025, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
2026 assembly elections

2026 assembly elections

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ள அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து தயாராகி வருகின்றனர். திமுக பொறுத்த வரை கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதோ அதே கட்சிகளுடன் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
AIADMK BJP Alliance

AIADMK BJP Alliance

அதிமுக பாஜக கூட்டணி

வழக்கம் போல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தும் என கூறி வரும் நிலையில் அவரும் இந்த தேர்தலை தனித்தே எதிர்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அரசு கிடையாது.! அமித்ஷாவிற்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி

34
Edappadi Palanisamy

Edappadi Palanisamy

கூட்டணி ஆட்சி கிடையாது

 ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக, ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தோம். அந்த முயற்சியில் பாஜக முதற்கட்டமாக எங்களுடன் இணைந்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறவே இல்லை. பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுக உடனான கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படவில்லை என பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்திருந்தது. 

இதையும் படிங்க:  இது மட்டும் நடந்துச்சுன்னா! 2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது! ஆர்.எஸ்.பாரதி!

44
nainar nagendran

nainar nagendran

வருங்கால முதல்வரே போஸ்டர்

இந்நிலையில், பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா. எஸ். செல்வகுமார் ஓட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது. அதில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக பொறுப்பேற்கும் வருங்கால முதல்வரே! வாழ்த்துகிறேன் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
நயினார் நாகேந்திரன்
திமுக
அதிமுக பாஜக கூட்டணி
அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved