பக்தர்களுக்கு ஜாக்பாட்; திருப்பதியில் லட்டு மட்டும் இல்ல, இனி இதுவும் ப்ரீ தானாம்
திருப்பதி கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு தேவையான வெந்நீரை இலவசமாக வழங்க கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவு.
திருப்பதி
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருமலா திருப்பதி
அவ்வாறு சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செய்கின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 27 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக் செய்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானம்
இதனிடையே கோவில் வளாகத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் குளிக்கும் அறை சற்று சுகாதாரமற்று காணப்பட்டதை அறிந்து அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
முடி காணிக்கை
பின்னர் முடி காணிக்கை செய்யும் பக்தர்களுக்க தேவையான அளவு வெந்நீர் வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் பழுதடைந்த நிலையில் காணப்படும் ஹீட்டர்களை மாற்றவும் உத்தரவிட்டார்.
திருப்பதி மலை கோவில்
இதனால் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் குளிர் உள்ளிட்ட எந்தவித சிரமமும் இன்றி வெந்நீர் குளித்து ஆனந்தமாக சாமி தரிசனம் மேற்கொள்ள வழிவகை செய்யும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.