- Home
- Tamil Nadu News
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு! மே 6-ம் தேதி முதல்! தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு! மே 6-ம் தேதி முதல்! தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் 3,935 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
TNPSC Group 4 Free Coaching: தமிழ்நாடு அரசுத்துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெறுகிறது. குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 24ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் 3,935 காலிப் பணியிடங்களுக்கு ஆட்தேர்வு செய்யப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி கொண்ட மனுதாரர்கள் அனைவரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 25-ம் தேதியாகும். தேர்வு குறித்த மேலும் விவரங்களை ww.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் மே 6-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பயிற்சி வகுப்புகள்
இலவச பயிற்சி வகுப்புகள்
இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்புகள் ஸ்மார்ட் போர்டு, இலவச வைஃபை வசதி, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம், பயிற்சி கால அட்டவணை, வாரத் தேர்வுகள், முழுமாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்படுகிறது. https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாவட்ட வேலைவாய்ப்பு மையம்
விண்ணப்பிக்கும் முறை
இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் (பொது மற்றும் மாற்றுத்திறனாளி), தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இரண்டு எடுத்து கொண்டு மே 6-ம் தேதி மையத்திற்கு நேரில் சென்று பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0422-2642388, 9499055937 என்ற எண்கள் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரடியாகவும், https://t.me/cbedecgcஎன்றtelegram என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.