- Home
- Tamil Nadu News
- அதிமுகவில் விலகுவதாக இபிஎஸ்-க்கு முன்னாள் அமைச்சர் பரபரப்பு கடிதம்.. அடுத்து இணைய போகும் கட்சி இதுதான்..!
அதிமுகவில் விலகுவதாக இபிஎஸ்-க்கு முன்னாள் அமைச்சர் பரபரப்பு கடிதம்.. அடுத்து இணைய போகும் கட்சி இதுதான்..!
முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியின் தலைவராக இருந்த நிலோபர் கபில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். கடந்த 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்த நிலோபர் கபிலுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தான் காரணம் என நிலோபர் கபில் பகிரங்கமாக குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கான மோசடி ஈடுபட்டதை அடுத்து திமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிலோபர் கபில் நீக்கப்பட்டார். சிறிது காலம் அமைதியாக இருந்த நிலோபர் கபில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆனாலும் அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்நிலையில் தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிலோபர் கபில் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகுவதாக நிலோபர் கபில் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில்: மாண்புமிகு கழக பொதுசெயலாளர் அவர்களுக்கு என் பணிவான வணக்கம், நான் நீண்ட காலமாக கழகத்தில் பயணித்து வந்தேன். தற்சமயம் எனது சொந்த சூழ்நிலை காரணமாக கழகத்தில் தொடர்ந்து பணிபுரிய இயலவில்லை. எனவே நான் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனது விலகல் கடிதத்தை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரை தாங்கள் எனக்கு அளித்த மரியாதைக்கு நன்றி மற்றும் கழக நிர்வாகிகளுக்கும். குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட கழக நிர்வாகிகளுக்கும், நன்றி என தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் திமுக மாநாட்டில் மலர்க்கொத்துடன் காத்திருக்கும் நிலோபர் கபில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

