என்னை எல்லாரும் அம்முனு செல்லமா கூப்பிட எம்ஜிஆர் தான் காரணமா? ஜெ பகிர்ந்த சுவாரசிய கதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அதிமுக தொண்டர்கள் அனைவரும் அம்மா என்று தான் அழைத்தார்கள். ஆனால், அதனையும் தாண்டி அவருக்கு அம்மு என்று செல்ல பெயர் எப்படி வந்தது என்று இங்கு பார்க்கலாம்.
Jayalalithaa
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். மறைவுக்கு பின்னர் அதிமுக ஜெ. (ஜெயலலிதா) அணி, ஜா. (ஜானகி) அணி என இரு அணிகளாகப் பிரிந்தது. அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றார். மேலும் அவரது அணி அந்த தொகுதிகளில் மொத்தமாக 27 இடங்களில் வெற்றி பெற்றது. அவரது போட்டியாளராகக் கருதப்பட்ட ஜானிகி அணி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அரசியலை விட்டே விலகுவதாக ஜானகி அறிவித்தார்.
J Jayalalithaa
அதன் பின்னர் அதிமுக.வின் தலைமைபொறுப்பையும் ஏற்று தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவராக சட்டசபையை அலங்கரித்தார். எம்ஜிஆரின் அரசியல் வாரிசும் ஜெயலலிதா தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் பிளவுபட்ட அதிமுக மீண்டும் புத்துணர்ச்சியுடனும், முழு வலிமையுடனும் செயல்படத் தொடங்கியது.
J Jayalalithaa
அதன் பின்னர் பல்வேறு சவால்களைக் கடந்து தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி திட்டம், அம்மா உணவகம் என இவர் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் இன்றளவும் மக்களுக்கு பயன் அளித்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் தொடர்பான வீடியோகள் தற்போது வைரலாகி வருகிறது.
நான் தமிழ் பெண் தான்
அந்த வகையில் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில். “கர்நாடகா மாநிலம் மைசூருவில் பிறந்திருந்தாலும் நான் தமிழ் பெண் தான். எனது குடும்பத்தினர் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான். வேலை காரணமாக எனது குடும்பத்தினர் பெங்களூருவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு நான் பிறந்தேன். ஆனால் என் தாய் மொழி தமிழ் தான், தாய் நாடு தமிழ் நாடு தான் என்றார்”
அம்மு
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதாவை அம்மா என்றே உரிமையுடன் அழைத்தனர். ஆனால், அதனையும் கடந்து அவருக்கு அம்மு என்ற செல்லப் பெயரும் இருந்தது. இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது குடும்ப உறுப்பினர்கள் என்னை அம்மு என்றே செல்லமாக அழைப்பார்கள். அதற்கு பின்னால் ஒரு சுவாரிசிய கதை உள்ளது. பொதுவாக குழந்தைகள் முதலில் அம்மா என்று கூறி பேசத் தொடங்குவார்கள். ஆனால் நான் அம்மு என்று கூறினேனாம். அதன் அடிப்படையில் தான் என்னை குடும்பத்தினர் அம்மு என்று அழைக்கத் தொடங்கினர் என புன்னகையுடன் தெரிவித்திருப்பார்.