- Home
- Tamil Nadu News
- மகளிர் உரிமை தொகைக்கு ஒப்புதல்.! வங்கி கணக்கில் ரூ.1000 எப்போது வரும்- வெளியான சூப்பர் தகவல்
மகளிர் உரிமை தொகைக்கு ஒப்புதல்.! வங்கி கணக்கில் ரூ.1000 எப்போது வரும்- வெளியான சூப்பர் தகவல்
தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் பெறப்பட்ட 28 லட்சம் புதிய விண்ணப்பங்களில், தகுதியான பயனாளிகளுக்கு டிசம்பர் மாதம் முதல் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதனையடுத்து 2023ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1.15 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் கடந்த 2 ஆண்டுகளாக புதிதாக யாருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மகளிர் உரிமை தொகை பெறமுடியாத மகளிர்கள் அரசின் மீது கோவத்தில் இருந்தனர்.
எனவே இதனை சரிசெய்யும் வகையில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யும் வகையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் உங்களுன் ஸ்டாலின் திட்டத்தில் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் சுமார் 28 லட்சம் பேர் புதிதாக மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறுதி செய்யும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
இதனையடுத்து மகளிர் உரிமை தொகை தொடர்பாக விண்ணப்பித்த பயணாளிகளுக்கு விரைவில் எம்ஸ்எஸ் மூலம் தகவல் அளிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதில் முதல் கட்டமாக வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்க தமிழக நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்த 28 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.