- Home
- Tamil Nadu News
- முதல்வர் ஸ்டாலின் சொல்லி 12 நாளு ஆச்சு! இன்னும் ஃபெஞ்சல் புயல் நிவாரண தொகை வரல! புலம்பும் விவசாயிகள்!
முதல்வர் ஸ்டாலின் சொல்லி 12 நாளு ஆச்சு! இன்னும் ஃபெஞ்சல் புயல் நிவாரண தொகை வரல! புலம்பும் விவசாயிகள்!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தும், இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

Fengal Cyclone
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத அதித கனமழை பெய்தது. இதனால் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, வீடுகள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதமடைந்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்டது.
CM Stalin
பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் ஃபெஞ்சல் புயலால் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஃபெஞ்சல் புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டது.
Fengal cyclone damage
மேலும், ஃபெஞ்சல் புயலால்பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை கணக்கெடுத்து, மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500, நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,000, நீண்டகாலப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.22,500 நிவாரணம் என்ற அடிப்படையில் விரைந்து நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டார். இதற்காக கணக்கெடுக்கப்பட்டு 18 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 3.23 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
Villupuram Formar
இந்த நிவாரணத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 18ம் தேதி கூறியிருந்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் சொல்லி கிட்டத்தட்ட 12 நாட்களான நிலையில் இதுவரை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் புலம்பி வருவது மட்டுமல்லாமல் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வேளாண் அதிகாரியை தொடர்பு கொண்ட போது விரைவில் அனைவரின் வங்கி கணக்கில் வரும் என்று கூறிய நிலைவில் எப்போது வரும் என்று
சரிவர பதிலளிக்கவில்லை. இதனால் ஃபெஞ்சல் புயல் நிவாரணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
Tamil Nadu Budget
தமிழக பட்ஜெட் வருகிற 14ம் தேதி தாக்கலுக்கு பிறகு 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என அரசு வட்டாரம் தரப்பில் கூறப்படுகிறது.