MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம்.! வெறும் 3 நாள் போதும்.. சொந்த தொழில் தொடங்கி சூப்பர் வாய்ப்பு

லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம்.! வெறும் 3 நாள் போதும்.. சொந்த தொழில் தொடங்கி சூப்பர் வாய்ப்பு

சென்னையில் நடைபெறும் இப்பயிற்சியில் மூலிகை தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பது குறித்து கற்றுத்தரப்பட்டு அரசு சான்றிதழும் வழங்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 05 2026, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்
Image Credit : our own

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்

தமிழகத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சொந்த தொழில் தொடங்க தமிழக அரசு சூப்பர் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், மூலிகை தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 10.02.2026 முதல் 12.02.2026 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

24
 தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்
Image Credit : Getty

தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்

இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் தயாரித்தல், தேங்காய் சாஸ், தேங்காய் எலுமிச்சை சாறு, உலர்த்திய தேங்காய், தேங்காய் மாவு, தேங்காய் அரிசி / இட்லி தூள், தேங்காய் பால் கேஃபிர், தேங்காய் வேர்க்கடலை, குக்கீகள், தேங்காய் சிப்ஸ் (இனிப்பு), தேங்காய் மிட்டாய், தேங்காய் சாக்லேட், VCO - அடிப்படையிலான மசாஜ் எண்ணெய்கள், VCO - அடிப்படையிலான முடி வளர்ச்சி மற்றும் பொடுகு எதிர்ப்பு எண்ணெய்கள், வாத நோய் மற்றும் தசை வலி நிவாரணத்திற்கான VCO - அடிப்படையிலான எண்ணெய், VCO - அடிப்படையிலான ஈரப்பதம் ஜெல், VCO - அடிப்படையிலான முக தோல் பராமரிப்பு சீரம், VCO - அடிப்படையிலான மூலிகை உதடு தைலம்(ஜெல்), VCO - அடிப்படையிலான வலி மற்றும் சுவாச தைலம் தயாரித்தல் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Related Articles

Related image1
குரூப்-4 தேர்வர்கள்! நாள் குறித்த டிஎன்பிஎஸ்சி! வெளியானது முக்கிய அறிவிப்பு!
Related image2
அடுத்தடுத்து விடுமுறை.! அரசு ஊழியர்கள், மாணவர்கள் கொண்டாட்டம்! போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்
34
கல்வித் தகுதி 10-ம் வகுப்பு
Image Credit : Asianet News

கல்வித் தகுதி 10-ம் வகுப்பு

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

44
விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : our own

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை– 600 032.8668102600 / 87544 95254 www.editn.in முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பயிற்சிகள்
தமிழ்நாடு அரசு
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
Recommended image2
குட்டி காஷ்மீராய் மாறிய உதகை.. பொதுமக்களை கதறவிடும் உறைபனி.. சிலாகிக்கும் டூரிஸ்ட்.. வைரலாகும் போட்டோ
Recommended image3
வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர் அதிமுகவில்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இபிஎஸ்..!
Related Stories
Recommended image1
குரூப்-4 தேர்வர்கள்! நாள் குறித்த டிஎன்பிஎஸ்சி! வெளியானது முக்கிய அறிவிப்பு!
Recommended image2
அடுத்தடுத்து விடுமுறை.! அரசு ஊழியர்கள், மாணவர்கள் கொண்டாட்டம்! போக்குவரத்து துறை சொன்ன குட்நியூஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved