- Home
- Tamil Nadu News
- உன்னை பார்த்ததில் இருந்தே எனக்கு! புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணை படுக்கைக்கு அழைத்த உதவி கமிஷனர்! சென்னையில் அதிர்ச்சி!
உன்னை பார்த்ததில் இருந்தே எனக்கு! புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணை படுக்கைக்கு அழைத்த உதவி கமிஷனர்! சென்னையில் அதிர்ச்சி!
காதலனால் ஏமாற்றப்பட்ட பெண் இன்ஜினியர், நியாயம் கேட்டு காவல் நிலையத்தை நாடியுள்ளார். ஆனால், புகார் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் லஞ்சம் பெற்றதும், விசாரணை அதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாப்ட்வேர் என்ஜினியர்
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சாப்ட்வேர் என்ஜினியராக உள்ள இவர் கனடா நாட்டில் என்ஜினியராக வேலை பார்த்து வந்த கணேஷை காதலித்து வந்துள்ளார். போனிலேயே இருவரும் காதலை வளர்த்து வந்தனர். கனடாவிலிருந்து கணேஷ் விடுமுறைக்கு சென்னை வந்தபோது, ரேகாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால் அதற்கு பிறகுதான், கணேஷூக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் உண்மை ரேகாவுக்கு தெரியவந்தது.
விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த ரேகா இதுகுறித்து கணேஷிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கணேஷ் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிடுவேன் என ரேகாவை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேகா உடனே இதுகுறித்து விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம்
இந்த புகாரை அடுத்து பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் விசாரணை நடத்தினார். அப்போது ரேகாவிடம் நியாயம் பெற்று தருவதாக கூறி வீட்டிற்கு தேவையான மளிகை மற்றும் ஆடம்பர பொருட்கள் என பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியுள்ளார். அதேசமயம், பிரியா தந்த புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதற்காகவும் கைது செய்யாமல் இருப்பதற்காகவும் கணேஷிடம் பல லட்சம் ரூபாயை உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் வாங்கியிருக்கிறார். மேலும், கணேஷிக்கு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறவும் பெனசீர் பேகம் உதவி செய்துள்ளார்.
மீண்டும் கனடாவுக்கு தப்பித்த நபர்
இந்த முன்ஜாமீனை வாங்கிய கையோடு உடனடியாக சென்னையில் இருந்து மீண்டும் கனடாவுக்கே கிளம்பி சென்றுவிட்டார். இந்த தகவல் பாதிக்கப்பட்ட ரேகாவுக்கு தெரியவந்ததை அடுத்து விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் பெனசீர் பேகத்திடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. உடனே பாதிக்கப்பட்ட ராணி இணை கமிஷனர் தீஷா மிட்டலை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் மற்றும் ஆன்லைன் மூலம் பல லட்சத்திற்கு பொருட்கள் வாங்கியது தொடர்பாக ஆவணங்களுடன் சமர்ப்பித்து புகார் அளித்தார்.
வாட்ஸ் அப்
இதையடுத்து, ரேகாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபுவுக்கு இணை ஆணையர் தீஷா மிட்டல் உத்தரவிட்டார். பிறகு உதவி ஆணையர் பாலகிருஷ்ண பாபு, பெண் பெனசீர் பேகம் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்துள்ளார். ஆனால், ரேகாவுக்கு நள்ளிரவில் வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பி உள்ளார். விசாரணை என்ற பெயரில் ஸ்டேஷனுக்கு அழைத்து, தோளின் மீது கை வைத்து தொட்டு தொட்டு பேசினாராம். ஆனால், பெனசீர் பேகம் மீது எந்த நடவடிக்கையும் பாலகிருஷ்ண பாபு எடுக்கவில்லை. உன்னை பார்த்ததில் இருந்தே எனக்கு வேலையில் கவனம் போகவில்லை. நான் சொல்வதை நீ செய்தால், உனக்கு நான் உதவி செய்கிறேன் என்று கூறி, ஆபாசமாக பேசியிருக்கிறார். பிறகு உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
காவல் ஆணையர் அருண்
இதனால் மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்த ரேகா நேரடியாக காவல் ஆணையர் அருணிடம் புகார் அளித்துள்ளார். அதில் விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் மீது புகார் தந்தார். இதைத் தொடர்ந்து ஆணையர் அருண், இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி உயர் காவல் துறை அதிகாரிகள் உதவி ஆணையர் மற்றும் உதவி பெண் ஆய்வாளர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
மேலும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் புகார் அளிக்க வந்த இளம் பெண்ணிடம் வீட்டிற்கு தேவையான பொருட்களை பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பெற்ற பெண் உதவி பெண் ஆய்வாளர் பெனசீர் பேகம் ஆகியோரை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். தற்போது சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடக்கிறது. இதில் ஹைலைட் என்னவென்றால், பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம், அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, சாலையோர வியாபாரிகள் மற்றும் புகார் அளிக்க வந்தவர்களிடம் பணம் வாங்கி சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

